மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள எண்ம தனிநபர் தரவுப் பாதுகாப்புக்கான வரைவு விதி குடிமக்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கும் என்பதோடு, தரவுப் பயன்பாடு ஒழுங்குமுறைக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இடையே சமநிலையையும் உறுதிப்படுத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
எண்ம தனிநபர் தரவுப் பாதுகாப்புக்கான வரைவு விதிகளை 'மைகவ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, பொதுமக்களிடமிருந்து வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.
இந்த வரைவு விதியின்படி, தனி நபர் தரவுகளை எந்தவொரு வடிவத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும், அந்த நபரின் வெளிப்படையான ஒப்புதலைப் பெற வேண்டும். குழந்தைகளின் தரவுகளாக இருக்கும் நிலையில், அவர்களின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவ்வாறு, தனிநபர் தரவுகளை சேகரித்துப் பயன்படுத்துபவர்களை தரவு நம்பிக்கையாளர் என்று இந்த வரைவுச் சட்டம் குறிப்பிடுகிறது. இணைய வணிகம் (இ-காமர்ஸ்), சமூக ஊடகங்கள், விளையாட்டு வலைதளங்கள் ஆகியவை இந்த தரவு நம்பிக்கையாளர் பிரிவின் கீழ் வருகின்றனர்.
This story is from the January 05, 2025 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 05, 2025 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ம.பி. அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை சக மருத்துவர் கைது
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளநிலை பெண் மருத்துவர், சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.
கருப்புக் கண்ணாடியில் கேமரா: அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவர் கைது
கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடி அணிந்து, அயோத்தி ராமர் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கார் பந்தய பயிற்சியில் விபத்து: நடிகர் அஜீத் காயமின்றி தப்பினார்
துபை கார் பந்தயத்துக்கான பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜீத்குமார் (படம்) நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார்.
அஸ்ஸாம் சுரங்கத்துக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு
அஸ்ஸாமின் திமா ஹாஸௌ மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சுரங்கத்தில் நீரில் மூழ்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு
குஜராத்தில் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து, 33 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட 18 வயது இளம்பெண் உயிரிழந்தார்.
நக்ஸல் தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு சத்தீஸ்கர் முதல்வர் அஞ்சலி
சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த படை வீரர்களுக்கு மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய், துணை முதல்வர் விஜய் சர்மா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மது விருந்து, இசை நிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு
பஞ்சாப் மாநிலம், பதிண்டாமாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்தில் திருமண விழாக்களில் மது விருந்து மற்றும் 'டிஜே' இசை நிகழ்ச்சியை தவிர்க்கும் குடும்பங்களுக்கு ரூ.21,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான்கான் வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைப்பு
மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி குண்டு கள் துளைக்காத கண்ணாடி, சாலையை முழுமையாக கண்காணிக்கும் அதிநவீன கேமராக்கள், 24 மணி நேர தனியார் பாதுகாவலர்கள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: முதல் பாதுகாப்பு பேச்சில் இந்தியா-மலேசியா முடிவு
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-மலேசியா செவ்வாய்க்கிழமை முடிவெடுத்தன.
எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: கார்கே
'நாட்டில் கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; எனவே, எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.