PrøvGOLD- Free

மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்
Dinamani Cuddalore|March 15, 2025
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

சென்னை, மார்ச் 14: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

மகளிர், மாணவருக்கான திட்டங்கள்: சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்வது அவசியம். அந்த வகையில், ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளும் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக்கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இந்தத் திட்டம் வரும் ஏப். 1 முதல் நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உருவாக்கிடும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக்கடன் பெற்று மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்க வழி ஏற்படும். இதற்காக அவர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்கான மானிய நிதியுதவியாக ரூ.225 கோடி ஒதுக்கப்படும்.

மீண்டும் கணினி: தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும்.

Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Cuddalore.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Cuddalore.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CUDDALORESe alt
Dinamani Cuddalore

சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை

சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Cuddalore

இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்

இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Cuddalore

நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு

நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Cuddalore

சாதனை வீராங்கனை சந்திக்க இருக்கும் சவால்கள்!

விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்கள் மிதப்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் என்றபோதும், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியில் நீண்ட காலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Cuddalore

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம், ஈயம்

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான பதக்கம், ஈயம் ஆகியவை கண்டறியப்பட்டதாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Cuddalore

விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை: மத்திய அரசு

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் தொடர்பாக புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்; அதில், நுகர்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Cuddalore

தேர்தல் செயல்முறை கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கலாம்

கடலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்படும் தேர்தல் செயல்முறை கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Cuddalore

நியாயவிலைக் கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனம் மூலம் இலவச அரிசி விநியோகம்

புதுவையில் நியாயவிலைக் கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்களில் இலவச அரிசி விநியோகிக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Cuddalore

5ஜி-யை அறிமுகப்படுத்திய வோடஃபோன் ஐடியா

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Cuddalore

திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 20, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer