ந்திய நாட்டின் அரசியல் என்பது சுதந்திரப் போராட்டத்திலிருந்து தொடங்குகிறது. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, மலேயா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பிடித்து ஆளத் தொடங்கியிருந்தனர். அப்போது இந்தியா ஒன்றாக இல்லை. 56 தேசங்களாகப் பிரிந்து கிடந்தது. வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினர். குறுநில மன்னர்களும், நிலக்கிழார்களும், ஜமீன்தார்களும் எளிதாக ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த காந்தியார் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளைக் கண்டு வெகுண்டெழுந்தார். தாய்நாட்டைக் காக்க இளைஞர்களை அறைகூவி அழைத்தார். அவரது அகிம்சைக் கொள்கையால் கவரப்பட்டு இளைஞர்களும் தம் உடல், பொருள், உயிரை அர்ப்பணித்திட அவர் பின் திரண்டனர்.
இதே காலகட்டத்தில் தீவிரவாத இளைஞர்கள் வன்முறைகளில் இறங்கினர். வெள்ளையர்கள் நடத்திய நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆஷ் துரையைச் சுட்டு வீழ்த்திய வாஞ்சிநாதன், கொடிகாத்த குமரன் இவர்களைப் போன்று எண்ணற்ற இளைஞர்களைக் கூறலாம். இவர்களுடைய நோக்கம் பணம், பதவி இல்லை. தேசத்தை விடுவிப்பதே நோக்கமாக இருந்தது. அதற்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்தனர்.
இன்று அரசியல் எப்படி இருக்கிறது? எங்கே சென்றால் பணமும், பதவியும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு கட்சியில் சேர்கிறார்கள். அல்லது கட்சியைத் தொடங்குகின்றனர். கட்சியைத் தொடங்கும் போதே முதலமைச்சர் நாற்காலியைத் தவிர, வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவது இல்லை.
அந்தக் காலத்தில் மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தனர். மக்களிடம் சென்று, மக்களிடம் கற்றுக் கொண்டு, மக்களுக்குப் பணியாற்றுவதே அரசியல் என்று அரசியல் விற்பன்னர்கள் கூறினர். இப்போது அதையெல்லாம் எடுத்துக் கூற யாரும் இல்லை. சொன்னாலும் கேட்பதற்கு எவரும் இல்லை.
This story is from the March 15, 2025 edition of Dinamani Karaikal.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 15, 2025 edition of Dinamani Karaikal.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை
மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்
தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமார் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.
டாஃபே துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமனம்
டாஃபே நிறுவன துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமிக்கப்பட்டார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி
சீர்காழியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக நிர்வாகி நிவாரணப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினார்.
நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்
நிதி நிர்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வர் பெருமிதம்
அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம்
அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத்தில் இணைந்தார் பிரதமர் மோடி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் டிரம்ப் மீடியா, டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தார்.
அமைதிப் பேச்சுவார்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு
ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.