
நாட்டின் 77வது சுதந்திர தின விழா, அரசு சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நேற்று கொண்டாடப்பட்டது. காலை 8.55 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரைச் சாலை வந்தார். அவரை தலைமை செயலர் காலனி ராஜீவ் வர்மா, டி.ஜி.பி., ஸ்ரீனிவாஸ் வரவேற்றனர். விழா மேடைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின விழா உரையாற்றினார். முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது கூறியதாவது, ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும், அவர்களின் வீர சாகசங்களையும் நினைவுகூர்வது நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். அவர்களின் தியாகத்திற்கு தலைவணங்கி, மரியாதை செலுத்த இது உகந்த தருணம். தியாக செம்மல்களுக்கு என் நன்றி கலந்த வீரவணக்கம் செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். நம்நாடு சுதந்திரம் பெற்ற நூற்றாண்டை நிறைவு செய்யும் 2047ல் முற்றிலும் முன்னேறிய நாடாக இருக்கும். அதற்கு மாநிலங்களின் பங்களிப்பாக புதுவையின் பங்கு மகத்தானதாக இருக்கும்.
This story is from the August 16, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 16, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

நவீன பால்பதன ஆலை கட்டுமான பணி மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், ரூ. 89.30 கோடி மதிப்பில் 2.0 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால்பதன ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

காரைக்கால் முழுவதும் விடியற்காலையில் குடிநீர், இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்
கலெக்டரிடம் தமுமுக கோரிக்கை

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிகழ்ச்சி, மதுரை விஷால் டி மால் மற்றும் மேல் மாசி வீதி கிளைகளின் சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.

பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றிவிட்டு.2026-ல் த.வெ.க. வரலாறு படைக்கும்: விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் விஜய், \"Friend, My Brother\" என பேசத் தொடங்கிய விஜய், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்
சிவபெருமானை போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது.

2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்படும்
கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ பேச்சு

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ரூ.1000க்கும் மேல் புத்தகம் வாங்கும் வாசிப்பாளர்கள் கௌரவிப்பு: ஆட்சியர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள்.

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.