கள்ளக்குறிச்சி விஷச் சம்பவத்தை சாராய சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஆதரித்து எடப்பாடி கருத்து தெரிவித்தார்.
இதற்கு தி.மு.க. காட்டமான பதில் தெரிவித்துள்ளது. எடப்பாடியும், அவருக்கு எதிரான வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்தான் என்றும், இப்போது மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை விடுகிறார் என்றும் கூறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட விஷச் சாராய சம்பவம் குறித்து தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று அறிக்கை வெளியிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்றும், இதன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரது இந்த கருத்துக்கு தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று பேட்டியளித்தபோது கூறியதாவது: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலில் அவர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தன்னைத் தானே அவர் பரிசீலிக்க வேண்டும்.
ஆண்டு தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடிக்கு 2018-ஆம் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்ததற்காக தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரவில்லை.
ஆனால் நீதிமன்றமே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இவ்வளவு பேசுகிற பழனிசாமி, நேற்றை தினம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு போகக்கூடாது என்று மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை விட்டுள்ளார். அவர் தான் முதன்முதலில் உச்சநீதிமன்றத்தை நாடி, அவர்மீது சி.பி.ஐ. வழக்கு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை பெற்றார். அந்த வழக்கு நடைபெற்றது.
This story is from the November 21, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 21, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணக்குமாருக்கு வழியனுப்பு விழா!
தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் வாழ்த்து!!
வழக்கறிஞரை வெட்டிய வழக்கில் பெண் வக்கீலும் கைதானார்!
கணவரை தூண்டி விட்டதாகப் புகார்!!
குடிபோதையில் பஸ்சை ஒட்டி காவல் நிலையத்தில் இடித்த மெக்கானிக்!
அடையாறு பணிமனையில் இன்று அதிகாலை சம்பவம்!!
3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றிபெற வாய்ப்பு!
வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்துக்கணிப்புகளும் புலப்படுத்தி உள்ளன.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்!
ஆட்சி அதிகாரத்தில் விடு தலைசிறுத்தைகளுக்கு பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்.
பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் புதிய டைடல் பூங்கா!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்!!
நாளை மறுநாள் புயல் சின்னம்: தமிழகத்தில் நவ.25 முதல் 27 வரை கன மழை!
குமரிக்கடல் காற்று சுழற்சியால் தென் மாவட்டங்களில் தொடர் மழை!!
எடப்பாடியின் கருத்துக்கு தி.மு.க. காட்டமான பதில்!
‘மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை விடுகிறார்’!!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார்!!
பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் 2ஆவது பெரிய செல்வந்தருமான கவுதம் அதானி, அமெரிக்காவில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறவும் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!
நடிகர் தனுஷ்-ஐஸ் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.