"ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு பாரிய சவால்"
Tamil Mirror|March 01, 2024
இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
"ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு பாரிய சவால்"

அதுவரை பதில் பொலிஸ் மா அதிபராக செயற்பட்டமை இந்நியமனம் சட்டவிரோதமானது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளை அப்பட்டமான மீறல் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இதுவரை 35 பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு பின்பற்றப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் மீறி மேற்கொள்ளப்பட்ட இந்நியமனம் முற்றிலும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது.

இது அரசியலமைப்பை மீறுவதோடு, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்திற்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டலாம்.

தற்போதைய ஜனாதிபதி தனது விருப்பத்திற்கேற்ப தன்னிச்சையாக செயற்படுவது ஜனநாயகத்திற்கு பாரிய சவாலாகும். இது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான பாரிய தாக்குதலாகும் என்பதோடு, குறுகிய அரசியல் இலக்குகளை இலக்காகக் கொண்டு இவ்வாறு செயற்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

தேசபந்து தென்னகோன் போன்றதொரு அதிகாரி, தனது தொழில் வாழ்க்கையில் பாரிய மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட ஒருவர், பொலிஸ் திணைக்களத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை சமூக நீதிக்கும் சமூக நலனுக்கும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

This story is from the March 01, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the March 01, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்
Tamil Mirror

சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்

ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில், சாதனைபுரிந்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதான நஸ்மி அக்யூலான் பிலால் என்ற மாணவனைக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
'சந்தாவை நிறுத்து”
Tamil Mirror

'சந்தாவை நிறுத்து”

மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள சில தொழிற்சங்கங்களுக்கு இதுவரை காலமும் மாதாந்தம் செலுத்தப்பட்டு வந்த சந்தா பணத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

time-read
1 min  |
October 08, 2024
ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது
Tamil Mirror

ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது

இலங்கையின் சுற்றுலா, வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.

time-read
1 min  |
October 08, 2024
காத்தான்குடி மாணவி கொழும்புக்கு வருகிறார்
Tamil Mirror

காத்தான்குடி மாணவி கொழும்புக்கு வருகிறார்

காத்தான்குடியிலிருந்து கொழும்பு வரையான துவிச்சக்கர வண்டி பயணத்தை காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா நதா என்ற மாணவி திங்கட்கிழமை (07) காலை ஆரம்பித்துள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
200மில். டொலர்கள் வழங்க அனுமதி
Tamil Mirror

200மில். டொலர்கள் வழங்க அனுமதி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 08, 2024
ஜே.வி.பி. தீர்த்து விடும் என்கிற “நம்பிக்கையே எனக்கில்லை”
Tamil Mirror

ஜே.வி.பி. தீர்த்து விடும் என்கிற “நம்பிக்கையே எனக்கில்லை”

ஜே.வி.பி. தமிழ் மக்களின் இனப் பிரச்சினையைத் தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களைக் கூடுதலாகக் கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி பலி
Tamil Mirror

தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி பலி

கொழும்பு-தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
October 08, 2024
"கூட்டணியில் சேர மாட்டோம்"
Tamil Mirror

"கூட்டணியில் சேர மாட்டோம்"

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணைய போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"
Tamil Mirror

"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"

\"முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்\" என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.

time-read
1 min  |
October 07, 2024
இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?
Tamil Mirror

இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

time-read
1 min  |
October 07, 2024