![ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி கிழக்குக்கு அருகில் நகரும்: 55,561 பேர் பாதிப்பு: கடும் எச்சரிக்கை விடுவிப்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி கிழக்குக்கு அருகில் நகரும்: 55,561 பேர் பாதிப்பு: கடும் எச்சரிக்கை விடுவிப்பு](https://cdn.magzter.com/1576149266/1732662600/articles/UMJieRx8r1732682031787/1732682687517.jpg)
மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு மறு அறிவித்தல் வரை தீவைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி அல்லது கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பைச் சூழவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திங்கட்கிழமை (25) இரவு 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கி.மீ. 290 கி.மீ மற்றும் திருகோணமலைக்கு.
410 புயல் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளதாகவும், இது அடுத்த 12 மணித்தியாலங்களில் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி தீவின் கிழக்கு கடற்கரைக்கு மிக அருகில் நகரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (26) அறிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This story is from the November 27, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 27, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
!["முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்" "முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/EH3ah7Ite1739847816078/1739847868335.jpg)
"முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்"
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்து வடக்கின் வீதிகள் தொடர்பிலேயே வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தினம்
'வளமான நாடு அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கக் கொள்கை வரை சட்டகம், சமூகங்களுக்கிடையேயான இடைவெளிகளைக் குறைப்பதற்கு உறுதி பூண்டுள்ள, ஒரு நல்லிணக்க இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது.
![கூட்டணிகளுடன் பேச முடிவு கூட்டணிகளுடன் பேச முடிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/4AfEDw6uy1739848127822/1739848183203.jpg)
கூட்டணிகளுடன் பேச முடிவு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பதில்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
![“கத்தியால் பால் கறக்க முயற்சி" “கத்தியால் பால் கறக்க முயற்சி"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/FyIw8LY1L1739847617667/1739847676501.jpg)
“கத்தியால் பால் கறக்க முயற்சி"
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கத்தியால் பால் கறக்க முயற்சிக்கும் வரவு - செலவுத் திட்டம் என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறியுள்ளார்.
![சூறாவளியால் 9 பேர் பலி சூறாவளியால் 9 பேர் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/R2rjw0uzP1739848483981/1739848619260.jpg)
சூறாவளியால் 9 பேர் பலி
அமெரிக்காவின் கென்டகியில் ஏற்பட்ட சூறாவளியில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மரக்கறிகளின் விளைச்சல் குறைந்தது
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
![புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும் புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/QZ7qCaRtJ1739848069352/1739848125847.jpg)
புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும்
இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசு தீர்வு காணவில்லையெனில், புதுடெல்லியில் போராட்டம் நடத்துவோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
![“இலஞ்சம் கொடுக்க வேண்டாம்” “இலஞ்சம் கொடுக்க வேண்டாம்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/T8Adu_F0F1739847996625/1739848070269.jpg)
“இலஞ்சம் கொடுக்க வேண்டாம்”
இன்று நான் கோடிட்டுக் காட்டிய கொள்கைகள், நான் இந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதற்கான தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் அதேவேளையில், நான் மட்டும் அவற்றை உருவாக்கவில்லை.
!["தொப்புள் கொடி உறவாகவே இருந்தாலும் எல்லை மீற வேண்டாம்" "தொப்புள் கொடி உறவாகவே இருந்தாலும் எல்லை மீற வேண்டாம்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/IFH_VwPVL1739848354962/1739848408867.jpg)
"தொப்புள் கொடி உறவாகவே இருந்தாலும் எல்லை மீற வேண்டாம்"
இந்தியக் கடற்பரப்பிற்குள் யாரும் அத்துமீறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனையே நாங்களும் செய்கின்றோம்.
![இராதாவுக்கு ”மகிழ்ச்சி” இராதாவுக்கு ”மகிழ்ச்சி”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/a3Rlwxavj1739847717225/1739847765322.jpg)
இராதாவுக்கு ”மகிழ்ச்சி”
மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டமை 'மகிழ்ச்சி’ எனினும் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வரவுசெலவுத் திட்டத்தில் பரிந்துரைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளமை 'கவலை' என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.