காலை உணவு அருந்திய பின் தங்கும் விடுதி தேடி அலைந்து பிறகு தாம்பரம் பகுதியில் உணவு விடுதியில் பணி செய்த தோழர் குமார் என்ற நண்பரை சந்தித்து எந்த தங்கும் விடுதியில் தங்க வசதி இருக்கும் என்று கேட்ட போது, அவர் திருவனந்தபுரம் வடக்கு எஸ்.ஆர்.எம். சாலையில் உள்ள ராயல் தங்கும் விடுதி தங்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறினார். அதன்படி காலை 10.30 மணியளவில் தங்கும் விடுதியில் எங்களை பதிவு செய்து பிறகு காலை கடன்களை முடித்து வைக்கம் செல்ல 11.30 மணியளவில் ஆட்டோவில் எர்ணாகுளம் மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து வைக்கம் செல்லும் பேருந்தில் பயணமானோம். வைக்கத்தை 12.30 மணியளவில் வந்தடைந்தோம்.
பகல் 1 மணியளவில் வைக்கம் பெரியார் நினைவு இல்லம் சென்றடைந்தோம். பெரியார் நினைவு இல்ல பாதுகாப்பாளர் மற்றும் பராமரிப்பாளர் தோழர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் எங்களை வரவேற்று மிகவும் பண்பாக பெரியார் அவர்களை பற்றிய பல தகவல்களை எங்களுக்கு வழங்கி வருகை பதி வேட்டை எங்களிடம் வழங்கி பல தலைவர்கள் வந்து சென்றதை காண்பித்து எங்களுக்கும் வருகை பதிவேடு வழங்கினார். நாங்களும் வருகை குறிப்பு எழுதினோம். தொடர்ந்து எங்களுக்கு பல அரிய தகவல்களை வழங்கி உற்சாகமூட்டி புகைப்படம் எடுத்துக் கொடுத்து 2 மணியளவில் எங்களின் பசியை போக்கும் வகையில் எங்களுக்காக சிறிது தூரம் நடந்து சென்று உணவு விடுதியில் விசாரித்து பிறகு எங்களின் வற்புறுத்தலுக்கு பணிந்து அவரும் எங்களுடன் உணவருந்தினார்.
பிறகு நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எங்களை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஓய்வு எடுக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார்.
சரியாக 4.30 மணியளவில் உன்னிகிருஷ்ணன் அவர் களுக்கு மாற்றாக தோழர் ஜோஸ் அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து “தோழர் ஜோஸ் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பார். இவரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்“ என்று கூறி மாலை 5 மணியளவில் விடைபெற்றார்.
தோழர் ஜோஸ் அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். அவருடன் மாலை தேநீர் அருந்தினோம்.
This story is from the March 24,2023 edition of Viduthalai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 24,2023 edition of Viduthalai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!