1. முன்னுரை
தமிழ் மாதங்கள் 12. நட்சத்திரங்கள் 27. திதிகள் 15. மாதங்களும் திதிகளும் இணைந்து சில மகத்தான பண்டிகை அல்லது விரத நாட்களாக மலரும். அதைப் போலவே மாதங்களும் நட்சத்திரங்களும் இணைந்து சில மகத்தான தினங்களாக மலரும். உதாரணமாக சித்திரையில் திருவாதிரை ராமானுஜரின் அவதார நாள். வைகாசியில் விசாகம் முருகனுக்கு உரிய நாள். நமமாழ்வாரின் ஜெயந்தி நாள். ஆனியில் சுவாதி கருடாழ்வாரின் ஜெயந்தி நாள்.ஆடியில் கிருத்திகை முருகனுக்கு உரிய நாள். ஆவணியில் அவிட்டம் மிகச் சிறப்பான பண்டிகை நாள். புரட்டாசியில் திருவோணம் திருப்பதியில் பிரம் மோற்சவம் கொண்டாடும் நாள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தையில் வரும் பூச நட்சத்திரம் அற்புதமான நாள். தைப்பூசம் மற்றும் தை கிருத்திகை, தை. அமாவாசை இவற்றின் சிறப்புகளை முப்பது முத்துக்களாக நாம் காண இருக்கின்றோம்.
2. பீஷ்மர் காத்திருந்த மாதம்
தை மாதம் மகர ராசிக்கு உரிய மாதம். உத்தராயணத்தின் முதல் மாதம் தை. இந்த மாதத்தில்தான் தெற்கு முகமாக சஞ்சரித்த சூரியன் வடக்கு முகமாக அடி எடுத்து வைக்கின்றார். அதனால் இது புனிதமான தினமாக கொண்டாடப்படுகிறது. உத்தராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்துத் தான் மஹாபாரதத்தில் பீஷ்மாச்சாரியார் அம்புப் படுக்கையில் காத்திருந்தார். அதனால் தையில் வரும் அஷ்டமி தினம் பீஷ்மாஷ்டமி என்று வழங்கப்படுகின்றது. பீஷ்மாஷ்டமி அன்று, ஒருவர் தன்னுடைய முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், பீஷ்மருக் கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியையும், பீஷ்மரின் ஆசியையும், ஒருசேரப் பெறலாம்.
3. சுப காரியங்களுக்காக காத்திருக்கும் மாதம்
தை மாதத்தின் தொடக்கம் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. காரணம், தட்சணாயணத்தின் கடைசி மணித்துளியும், உத்திராயணத்தின் முதல் மணித்துளியும் உறவாடும் உன்னத நேர மல்லவா அது. அப்பொழுது செய்யப்படும் வழிபாடும், தானமும், தவமும்நூறு மடங்கு பலனைத் தரும் என்கின்ற நம்பிக்கை இருக் கிறது. தை மாதம் மகர மாதம் என்று பார்த்தோம். காரணம் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம்தான் தை மாதம். இந்த மகர ராசி என்பது சனிகிரகத்துக்குரிய ராசி.
This story is from the January 16, 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 16, 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.