அருகில் வசிக்கும் தேவதைகள்!
Kanmani|October 09, 2024
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
டாக்டர் அகிலாண்ட பாரதி
அருகில் வசிக்கும் தேவதைகள்!

அவர் ஏற்கனவே அறிமுகமானவர் தான். பரிசோதனையை முடித்து, முதலுதவி சிகிச்சையளித்து பின் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால் நரம்பு வழியாக ட்ரிப்ஸ் ஏற்றத் துவங்கினேன்.

அடுத்து வந்த நோயாளி முப்பிடாதியின் உறவினர்.

‘என்ன? எங்க அத்தை இங்கே படுத்திருக்காங்க? ஒத்தையிலேயா வந்தாங்க? இப்படி ஒருநாளும் அசந்து படுக்க மாட்டாங்களே!' என்றவர் அத்தையின் பிள்ளைகளுக்குத் தகவல் சொன்னார். அவர்கள் வருவதற்குள் அத்தையின் பெருமைகளை பற்றிக் கதை கதையாகச் சொன்னார்.

முப்பிடாதி நான்காவது தலைமுறை பார்த்துவிட்டவர். சமீபமாக அவரது பேத்திக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. பேத்தியின் குழந்தை உட்பட அனைவருக்கும் பக்குவம் பார்ப்பது முப்பிடாதி பாட்டி தானாம். எல்லா வேலையும் எங்க அத்தையை செய்ய வச்சிட்டு அவங்க மக, மகன் எல்லாம் சொகுசா இருக்காங்க என்று அங்கலாய்ப்புடன் பேசினார் அவரது உறவுப் பெண்.

பின் உறவினர்கள் வந்ததும் அவர்களிடமும் கடிந்து ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு கிளம்பினார். அவர்களும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்கள், மறுத்துப் பேசவில்லை.

அடுத்தடுத்த நாட்களும் சிகிச்சைக்கு வர வேண்டியது இருந்தது முப்பிடாதி பாட்டிக்கு.

அப்போது கொஞ்சமாகத் தேறி நன்றாகப் பேசும் நிலையில் இருந்தார்.உடன் வந்த மகனும் மருமகளும், ரெஸ்ட் எடுங்கன்னா கேட்க மாட்டேங்கிறாங்க. இழுத்துப் போட்டு எல்லா வேலையும் பார்க்கிறாங்க... என்றனர்.

"அப்படியே பழகிப் போச்சு. எனக்குக் கல்யாணம் ஆகிக் கொஞ்ச நாள்ல மாமியார் தவறிட்டாங்க. நான் தான் மூத்த மருமகள். எனக்கு ஏழு நாத்தனார், இரண்டு கொழுந்தன். அவ்வளவு பேருக்கும் வரன் பாத்து, கட்டி வச்சேன். மாத்தி மாத்தி ஒவ்வொருத்தரா பேறுகாலத்துக்கு தாய் வீடுன்னு எங்க வீட்டுக்குத் தான் வருவாங்க. இதுக்கு இடையில எனக்கும் நாலு பிள்ளைங்க.

This story is from the October 09, 2024 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the October 09, 2024 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANMANIView All
ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்
Kanmani

ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்

சோஷியல் மீடியாவில் படு பிஸியாக ஹாட் புகைப்படங்களை ட்வீட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு டிராவல், போட்டோகிராபி என வித்தியாசமான ஆர்வமும் உண்டு. தமிழில் கார்த்தியுடன் சர்தார்-2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் ஒரு அழகான சிட்சாட்.

time-read
2 mins  |
February 19, 2025
காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!
Kanmani

காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!

பிப்ரவரி 14 காதலர் தினம்... இன்றைய டிஜிட்டல் யுக காதல், முந்தைய தலைமுறையினர் புரிந்து கொள்ள முடியாத ரகம் என்பது ஒருபுறமிருக்க, காதல் என்பது பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு உறவாடி வரும் உணர்வுதான்.

time-read
1 min  |
February 19, 2025
நீயின்றி நானில்லை....
Kanmani

நீயின்றி நானில்லை....

ஒரு அழகான அம்சமான பங்களா! இந்த மாதிரி கடலை பார்த்தபடி இருக்கணும்.' \"நல்ல விஸ்தாரமான பால்கனி! அதில கண்டிப்பா ஊஞ்சல் போட்டிருக்கணும். கூடவே அழகான பூச்செடிகள் இருக்கணும்.''

time-read
2 mins  |
February 19, 2025
உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?
Kanmani

உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?

சின்னஞ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தின் பண்டம் என்னவெனில் உருளைக்கிழங்கு சிப்ஸை கூறலாம்.

time-read
1 min  |
February 19, 2025
ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!
Kanmani

ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!

அந்தக்காலத்தில் மனிதர்களுக்கு கேடெல்லாம் நேரடியாக வந்தது. இப்போது ஆன்லைனில் வருகிறது.விரைவான தகவல் பரிமாற்றத்து க்கு உதவும் ஆன்லைனை மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவது இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது.

time-read
1 min  |
February 19, 2025
அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!
Kanmani

அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!

மக்களிடம் அதீத கெடுபிடி வரி வசூலில் ஈடுபடுவதுதான் இந்திய ஒன்றிய அரசின் முதல் வேலை என்பது மக்களின் மனதில் ஆழப் பதிவாகிவிட்டது. அதிலும் டோல்கேட் கட்டணம் வசூலில் தனி சாதனையே படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுங்க வசூல் சட்டத்துக்கு புறம்பாகவே செய்யப்படுகிறது எனலாம்.

time-read
1 min  |
February 19, 2025
மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...
Kanmani

மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...

கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிரயாக்ராஜ் திரிவேணியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
February 19, 2025
பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!
Kanmani

பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!

உலக அரங்கில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா களமிறங்கியுள்ளார்.

time-read
1 min  |
February 19, 2025
நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?
Kanmani

நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?

இன்று உலகம் முழுவதும் உள்ள பெரும் பிரச்சனை எதுவென கேட்டால் நிச்சயம் தண்ணீர் என்றுதான் கூறுவார்கள். இந்த நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் 'நைட்ரேட்' அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
February 19, 2025
நான் தம் பிரியாணி மாதிரி!
Kanmani

நான் தம் பிரியாணி மாதிரி!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம், மாடர்ன் லவ் ஆந்தாலாஜி படங்களில் நடித்தவர், தற்போது ரவி மோகனுக்கு ஜோடியாக 'ஜூனி' படத்தில் நடிக்கிறார். அவருடன் ஒரு அழகான உரையாடல்.

time-read
1 min  |
February 19, 2025