அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
Kanmani|November 06, 2024
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
தவா
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கு வங்கத்தின் கூச்பெகாரில் மகாராஜா ஜிதேந்திர நாராயணனுக்கும் மராட்டிய இளவரசி இந்திரா ராஜேவுக்கும் பிறந்தவர் இளவரசி காயத்ரி தேவி. உலகின் தலைசிறந்த 10 அழகிய பெண்களில் காயத்ரி தேவியும் ஒருவர் என்று 'வோக்' பத்திரிகை அந்நாளில் புகைப்படம் வெளியிட்டது.

லண்டனில் பள்ளிப் படிப்பை முடித்து சுவிட்சர்லாந்தில் உயர்கல்வி பயின்றவர், போலோ விளையாட்டிலும் குதிரை மீது அமர்ந்து செய்யும் சாகசங்களிலும் சிறந்து விளங்கினார். வேட்டையாடுவது, விலையுயர்ந்த வெளிநாட்டு கார்களை வாங்கி ஓட்டுவது என வீர விளையாட்டுகளிலும் ஈடுபட்டார்.

காயத்ரி தேவி, சவாய் மான் சிங் மகாராஜாவை திருமணம் செய்து கொண்டார். 1965-ல் காயத்ரி தேவியின் கணவரை ஸ்பெயின் தூதராக இந்திய அரசு நியமித்தது. அந்த காலகட்டத்தில் இளவரசி காயத்ரி தேவியின் பார்வை அரசியல் பக்கம் திரும்பியது.

ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதியில் 1962, 1967, 1971ஆகிய தேர்தல்களில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காயத்ரி தேவி.

அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸில் சேருமாறு காயத்ரி தேவிக்கு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அழைப்பு விடுத்தார். ஆனால் எனக்குக் கொள்கைதான் முக்கியம் என்று கூறி அந்த அழைப்பை நிராகரித்தார் காயத்ரி தேவி.

எமர்ஜென்சி காலத்தில் பிரதமர் இந்திரா காந்தியையும், நெருக்கடி நிலையையும் எதிர்த்ததால், 5 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அரசியலை விட்டு விலகிய காயத்ரி தேவி, சமூக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

தனது 89-ஆவது வயதில் கூட ஜெய்ப்பூரில் ஆக்ரமிப்புகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசியலை விட்டு விலகி இருந்த நிலையிலும்... எம்.பி. தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகள் சார்பில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வந்தது. இருந்தும் அந்த வாய்ப்புகளை புறந்தள்ளி விட்டார்.

1976-ல் இவருடைய சுயசரிதை (A Princess Remember) வெளியிடப்பட்டது. ஃப்ராங்கோயிஸ் லெவி இயக்கிய Memoirs of a Hindu Princess என்கிற திரைப்படம் இளவரசி காயத்ரி தேவியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

Esta historia es de la edición November 06, 2024 de Kanmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 06, 2024 de Kanmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KANMANIVer todo
எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
Kanmani

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!

காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

time-read
1 min  |
March 12, 2025
நம்மை நாமே நேசிக்கணும்!
Kanmani

நம்மை நாமே நேசிக்கணும்!

மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

time-read
1 min  |
March 12, 2025
படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
Kanmani

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?

பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

time-read
4 minutos  |
March 12, 2025
வியூகம் வகுக்க பிடிக்காது!
Kanmani

வியூகம் வகுக்க பிடிக்காது!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

time-read
1 min  |
March 12, 2025
கனவை நினைவுபடுத்த முடியுமா?
Kanmani

கனவை நினைவுபடுத்த முடியுமா?

உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

time-read
1 min  |
March 12, 2025
அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
Kanmani

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!

புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

time-read
3 minutos  |
March 12, 2025
ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
Kanmani

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!

இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

time-read
2 minutos  |
March 12, 2025
உலக மகளிர் தினம் !
Kanmani

உலக மகளிர் தினம் !

1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

time-read
1 min  |
March 12, 2025
வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
Kanmani

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!

போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

time-read
2 minutos  |
March 12, 2025
ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
Kanmani

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!

ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.

time-read
2 minutos  |
March 12, 2025