Heartfulness Magazine Tamil - July 2024
Bu konuda
அன்புள்ள வாசகர்களே,
தாஜி அவர்கள், ஜூன் 2024ல், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வழியாக பயணம் மேற்கொண்டிருந்தார். இது பல உயர்பதவி வகிப்பவர்களுடனான சந்திப்புகளும், நேர்காணல்களும் அமைய வழிவகுத்தது. ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பாரிஸில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடத்தப்பட்ட, 'மாஸ்டர் யோகா' கண்காட்சியின் முன்-அறிமுக நிகழ்ச்சி, ஒரு சிறப்பம்சமாகும். அப்போது அவரிடம், யுனெஸ்கோ கலை தூதரான குய்லா கிளாரா கெஸ்ஸோஸ் அவர்கள், சமூகத்தில் கலையின் பங்கு குறித்து நேர்காணல் செய்தார். ஒருவரின் வாழ்வையே மாற்றக் கூடிய இந்தப் பேட்டி, இந்த இதழில் உள்ள சிறப்பம்சங்களுள் ஒன்றாகும்.
மேலும், நமது மனநலனை எவ்வாறு மறுசீரமைப்பது, மாற்றத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் தாஜி கூறியதை கேட்க இருக்கிறோம். பிர் ஜியா இனயத் கான் வழங்கும், நம் புலன்களுக்கு புலப்படாத உள்முகத் தோட்டங்களைப் பற்றியும், பார்பரா சான்வில்லா ஒத்ததிர்வு பற்றியும், சோஃபியா ஸ்ட்ரில்ரெவெர் மனசாட்சி பற்றியும், இசக் அடிசஸ் கூட்டுத்தலைமை பற்றியும் மற்றும் முஹம்மத் ஹனிஃப் அப்துல் ரஸாக் அமைதியும், நல்லிணக்கமுடைய ஒரு நிஜ-வாழ்க்கை நகரம் பற்றியும் கேட்கவிருக்கிறோம்.
பேராசிரியர் பால் வோல்ஃப், நெறிமுறைகளில் கவனம் செலுத்துகிறார். பேராசிரியர் லாரா ஓடிஸ், சமூகத்தில் அக்கறையுடன் கூடிய கவனிப்பின் நெறிமுறைகளை எடுத்துக்காட்டும் இலக்கியத்தில் கவனம் செலுத்துகிறார், மற்றும் ஸ்ரவன் பண்டா ஒரு பழங்கால ஆரோக்கியமளிக்கும் லேகியத்தின் நன்மையைப் பற்றி நமக்கு விளக்குகிறார். தாமஸ் மோகன்ஸென், ஒருமைத்தன்மை, அதுவாக ஆதல் மற்றும் இயல்பான தன்மையைப் பற்றிப் பேசுகிறார். லெஸ்லி பிளேர் ஒரு கனவை பகிர்ந்துகொள்கிறார், மேலும் சாரா பப்பர், நம் குழந்தைகளுக்கு மற்றுமொரு ஊக்கமளிக்கும் கதையைக் கூறுவதோடு, சில வேடிக்கையான உண்மைகள் மற்றும் புதிர்களால் அவர்களுக்கு சவால்விடுகிறார்.
படித்து மகிழுங்கள்,
பதிப்பாசிரியர்கள்
Heartfulness Magazine Tamil Description:
Yayıncı: Sahaj Marg Spirituality Foundation
kategori: Religious & Spiritual
Dil: Tamil
Sıklık: Monthly
Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.
We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital