CATEGORIES
Kategoriler
இரு சக்கர வாகனம் மீது டிராக்டர் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் அரசுப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை, மாணவி ஆகியோர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
இறுதி பெயர்ப் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதி பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்டினார்.
மதிப்பெண்களுடன் விடைத்தாள் நகல் கோரி வழக்கு; மருத்துவப் பல்கலை. பதிவாளர் பதிலளிக்க உத்தரவு
இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்திருந்தாலும் உரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, மதிப்பெண்களுடன்கூடிய விடைத்தாள் நகல் வழங்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகப் பதிவாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருவண்ணாமலையில் மண் சரிவு பகுதியில் மத்திய குழு ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், சாலைகள், மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த இடம் ஆகியவற்றை மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
காற்றழுத்த தாழ்வு: புயலாக மாற வாய்ப்பில்லை
வானிலை ஆய்வு மையம்
திருமயிலை ரயில் நிலையத்தில் தகராறு: ஒருவர் உயிரிழப்பு
திருமயிலை பறக்கும் ரயில் நிலையத்தில் இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நகரும் படிக்கட்டில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை ஆதரிக்கத் தயார் – அன்புமணி
அதானி முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை ஆதரிக்கத் தயார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
'டிஜிட்டல் அரஸ்ட்' மோசடி: ரூ. 3.84 கோடி பறிப்பு மூவர் கைது
சென்னையில் 'டிஜிட்டல் அரஸ்ட்' மோசடி மூலம் ரூ.3.84 கோடி பறித்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நிதி ஒதுக்கீடு செய்தும் செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி
தமிழக அரசுத் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் ரூ.1,000 கோடி வரை செலவழிக்கப்படவில்லை என இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் (சிஏஜி) தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் சொத்துகளின் வருவாய்- இழப்பை உறுதி செய்ய முடியவில்லை: சிஏஜி
அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள், வருவாய் மற்றும் இழப்பை உறுதி செய்ய முடியவில்லை என முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை 2) கோ.ப. ஆனந்த் கூறினார்.
மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.53,000 கோடி விடுவிப்பு
இந்தியா முழுவதும் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு முறையீடுகளுக்கு (கிளைம்) நிதித் தீர்வு வழங்கியிருப்பதாக ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வியில் 'ஏஐ' பெரும் பங்காற்றும்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
சென்னையில் டிச.15-இல் 'காரைக்குடி சந்தை' கண்காட்சி
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) காரைக்குடி சந்தை கண்காட்சி நடைபெறவுள்ளது.
ஆளுநர் மாளிகை சார்பில் கட்டுரைப் போட்டிகள்
வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு
மூளையின் உயர் தெளிவுத் திறன் படங்கள் வெளியீடு
உலகிலேயே முதல்முறை-சென்னை ஐஐடி சாதனை
காய்கறிகள் விலை திடீர் வீழ்ச்சி: தக்காளி கிலோ ரூ. 20-க்கு விற்பனை
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கூட்டணி தலைமை: மம்தாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமை வகிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நாளை பாரதி விழா
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு சம்பத் நகர் கொங்கு கலையரங்கில் பாரதி விழா புதன்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
டிச. 27-இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
திருவண்ணாமலையில் ஸ்ரீசந்திரசேகரர், 63 நாயன்மார்கள் வீதியுலா
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின் 6-ஆவது நாளான திங்கள்கிழமை காலை வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் 63 நாயன்மார்கள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.
அல்-அஸாதுக்கு அடைக்கலம்: உறுதி செய்தது ரஷியா
கிளர்ச்சியாளர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபர் பஷார் அல்-அஸாதுக்கு தங்கள் நாடு அடைக்கலம் அளித்துள்ளதை ரஷியா உறுதிப்படுத்தியது.
எல் சால்வடாரில் நிலநடுக்கம்
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென் கொரிய அதிபர் வெளிநாடு செல்லத் தடை
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் வெளிநாடுகளுக்குச் செல்ல அந்த நாட்டு நீதித்துறை தடை விதித்துள்ளது.
அபுதாபி கிராண்ட் ப்ரீ: லாண்டோ நோரிஸ் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், கடைசி மற்றும் 24-ஆவது ரேஸான அபுதாபி கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவரான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார்.
பெண்களின் வளர்ச்சிக்கு எதிரான தடைகள் உடைக்கப்படும்
எல்ஐசி பீமா-சகி திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு
அடிலெய்ட் டெஸ்ட்டில் மோதல் போக்கு சிராஜுக்கு அபராதம்; ஹெட்டுக்கு எச்சரிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2-ஆவது டெஸ்ட்டின்போது பரஸ்பரம் மோதல் போக்கில் ஈடுபட்டதாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதத்தை ஐசிசி அபராதமாக விதித்தது.
FIDE உலக சாம்பியன்ஷிப் 12-ஆவது சுற்றில் வென்றார் லிரென்
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 12-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென், சேலஞ்சரான இந்தியாவின் டி.குகேஷை திங்கள்கிழமை வென்றார்.
இலங்கை டெஸ்ட் தொடர்: தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 109 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2-0 என முழுமையாகத் தொடரைக் கைப்பற்றியது.