CATEGORIES
Kategoriler
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லிட்டில்ஜோன் வருகிறார்
சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் விஞ்ஞான விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் ஆகஸ்ட் 31 வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இ.தொ.கா. ஆதரவு ரணிலுக்கு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு 'AAA' கடன் மதிப்பீடு
பங்களாதேஷில் உள்ள நிதி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த கடன் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகை குஷ்பு
தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த நடிகை குஷ்பு, மீண்டும் தீவிர அரசியலில் இறங்கி விட்டதாக அறிவித்துள்ளார்.
இளம் மருத்துவர் கொலையால் மருத்துவமனை நொருக்கப்பட்டது
மேற்கு வங்கத்தில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவமனையை ஏராளமானோர் சேர்ந்து அடித்து நொறுக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருட்டுப் பொருட்களை திரும்பப் பெறும் மாணவர்கள்
பங்களாதேஷ் பிரதமர் இல்லத்தில் திருடிச் செல்லப்பட்ட பொருட்களை மாணவர்கள் அமைப்பினர் திரும்ப பெறும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்லாண்டாவை வென்ற றியல் மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது.
மருதங்கேணி கிராமத்தின் எல்லைகளை ஆக்கிரமிக்க சதி
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கின் நிர்வாக தலைமையிடமாக இருக்கும் வரலாற்றுப் பாரம்பரியமிக்க மருதங்கேணி கிராமத்தின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பிக்கள் மூவர் ஜனாதிபதிக்கு ஆதரவு
இனவாதி என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாசவை அந்தக் கட்சி எந்த அடிப்படையில் ஆதரிக்கிறது என்பது தெரியவில்லை, அந்த முடிவையும் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
குரங்கு அம்மையால் அவசரநிலை பிரகடனம்
உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்துள்ளது.
சின்னங்களின் விபரங்கள்
செப்டெம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மலையக தமிழர் சமூகம் உப குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 08 முக்கிய கருப்பொருள்களை கொண்டு அமைத்துள்ள உபகுழுவில் மலையக தமிழர்களுக்கு நிலவும் மனித உரிமைகள் சார் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மலையக தமிழர் சமூகம் என்ற உப குழுவையும் அமைத்துள்ளது.
கீதாவுக்கு கோபம்
ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
மடு அன்னையின் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது
மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி வியாழக்கிழமை (14) காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.
"நொண்டி குதிரையுடன் கூட்டு சேர்ந்த கண்டி கழுதை"
வேலுகுமார் செய்துள்ள செயல், மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. மன்னிக்கக்கூடாது.
ஆடைகளை களைந்து அணைத்த காதலன் கைது
கதிர்காமம் தேசிய பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞன் ஒருவர் கதிர்காமம் பொலிஸாரால் புதன்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் சூறாவளி பிரசாரம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வேட்பு மனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவில், வியாழக்கிழமை (15) காலை 9 மணிமுதல் 11 மணிவரையிலும் முன்னெடுக்கப்பட்டது.
மனைவிக்கு சிலை வைத்தார் மார்க் ஸுக்கர்பெர்க்
மனைவிக்காக சிலை வைத்த மார்க் ஸூக்கர்பெர்க்-க்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கடுமையான வெப்பத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு
மோசமான வெப்ப அலையால் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
உப்பு, சீனியில் பிளாஸ்டிக்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் சீனி மற்றும் உப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை
திரையரங்கில் ஏற்பட்ட மோதலில் தனுஷ் ரசிகரின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் 1,000 சதுர கிலோ பரப்பு உக்ரைன் வசமானது
கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன என அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முன்னேறினார் றோஹித் ஷர்மா
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் அணித்தலைவர் றோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார்.
சமத்துவக் கட்சி இருவரையும் சந்தித்தது
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் சமத்துவக் கட்சிக்கும் இடையில் தனித்தனியாகச் சந்திப்புகள் நடந்துள்ளன.
நாமலுக்கு கோட்டா ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
இளவாலையில் மூன்று பபுகுகளுக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பாரிய வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ரூ.1,700க்கான வர்த்தமானி தமிழில் வெளியாகவில்லை
தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாவை வழங்குவதற்கான 239727 என்ற இலக்கத்தை கொண்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (13) அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
30 பேரடங்கிய அணி ஜனாதிபதிக்கு ஆதரவு
30 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பொதுஜன ஐக்கிய முன்னணி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்சன யாப்பா, புதன்கிழமை (14) தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மனுத்தாக்கல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஷான் ரணசூரிய, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை புதன்கிழமை (14) தாக்கல் செய்துள்ளார்.