CATEGORIES
Kategoriler
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.
போலிச் செய்தி இப்போது பெரிய பிரச்னை
பொதுவாக இருபது முப்பது ஆண்டு களுக்கு ஒரு முறை எல்லாமே பெரிய மாற்றத்துக்கு உள்ளாகும். ஊடகத் தில் ஒரு காலத்தில் பத்திரிகை இருந்தது; பிறகு தொலைக்காட்சி வந்தது. அதிலேயே பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள்.
நிறுவனமான கட்சிகள்!
மக்களாட்சியில் கட்சிகளின் தோற்றத்துக்கு தேவைகள் இருந்திருக்கின்றன. சுதந்தரபோராட்டத்தையொட்டி காங்கிரஸ் கட்சி உருவானது. அதில் உறுப்பினராக இருந்த எல்லோரும் சொந்த செலவில்தான் கட்சிக்காக வேலைபார்த்தார்கள்.
அரசியல் தலைவர் என்னும் பிராண்ட்
பாமகவில் இருந்து ஆரம்பிக்கலாமா? ஆம், இன்று நாம் பேசுகிற பெருநிறுவன இயங்குமுறைக்கு சின்னக் கட்சியாக இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் என அவர்களையே சொல்லவேண்டும்.
கணிப்புகளைக் கணித்தல்!
அது 2019 நாடாளுமன்றத் தேர்தல் காலகட்டம்.தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகித்திருந்தது. அப்போது, ‘மக்கள் யார் பக்கம்' என்ற தலைப்பில் பிரபல மூன்றெழுத்து சேனல் ஒன்று மெகா சர்வேயை எடுத்திருந்தது. மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் தமிழகம் - புதுச்சேரியில் சேர்த்து 8250 பேரிடம் கருத்துக்கணிப்பு முடிவுகளை எடுத்ததாக அந்த சேனல் அறிவித்தது. அதன் முடிவுகளைப் பார்த்து தைலாபுரமே தடதடத்தது.
சாமானியனும் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகவேண்டும்!
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத்தலைவர், தமிழக பாஜக
கட்சிகள் எப்படி சம்பாதிக்கின்றன?
கட்சிகள் செயல்படுவதற்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? கட்சிக்கு ஏன் பணம்தேவை? அதன் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சம்பளம் இல்லை.
களத்திலும் இருக்கிறோம்; தளத்திலும் இருக்கிறோம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊடகம் மூலம் கருத்துகளை எடுத்துச்செல்வது கட்சிகளின் இயல்பு. முன்னர் செய்தித்தாள், தொலைக்காட்சி என இருந்தது. டீ கடைகளில் பேசப்பட்ட அரசியல் இப்போது மொபைலில்தான் என்றாகிவிட்டது.
ஆன்மிக அரசியல்!
இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பக்கம் ஒன்று புரண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் முகமே மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகன் மொழி நடிப்புதான்! ஹரீஷ் பேரடி
'ஆண்டவன் கட்டளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹரீஷ்பேரடி முறையான நடிப்புப் பயிற்சி பெற்றவர்.
பிள்ளைப் பூச்சி
நீளமான வீட்டின் பின்புறத் தார்சாலில் பெரிய உரலில் பருத்திக் கொட்டை அரைத்துக் கொண்டிருந்தாள் ராசாத்தி.
காதல் தி கோர் இந்திய சினிமாவில் ஓர் இனிய வரவு!
கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய சினிமாவில் புதிய பேசுபொருளாக இணைந்திருப்பது சுயபால் விருப்பாளர்கள் பற்றிய கதைகள். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மாற்றுப்பாலினத்தவர் பற்றிய படங்கள் வரத்தொடங்கின.
கயல்முக வேங்கையின் வனம்!
ஒரு நாவலாசிரியனுக்கு முன்னால் உள்ள சவால், தனது முந்தைய நாவல்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாக அவனது அடுத்த நாவல் அமையவேண்டும் என்பதுதான். புதிய களத்துடன் புனைவாக்கத்தில் அடுத்த கட்டத்தை எட்டுவதும் மிகவும் முக்கியம்.
'ஓ... நீங்கதான் வில்லன் கேரக்டர் பண்றீங்களா?'
நடிகனாக அல்லாமல் கதாபாத்திரமாக மனதில் நிற்பவர். சேலத்துக்காரராக இருந்தாலும் எல்லா வட்டார வழக்கும் இவர் நாக்கில் நடனம் ஆடும். படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விவேக் பிரசன்னாவிடம் பேசினோம்.
கட்சிகள் கம்பெனிகள் ஆகவே முடியாது!
டெல்லியில் ஒரு முக்கிய அரசியல் தலைவரை நட்பின் நிமித்தமாக சந்திக்கச் சென்றிருந்தேன். எனக்கு முந்தைய நேரம் ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வெளியே காத் திருக்க வேண்டாமென்று அந்த மென்பொருள் நிறுவன மீட்டிங்கில் என்னையும் கலந்துகொள்ளச் சொன்னார். எனது ஆலோசனையும் உதவுமென்பதற்காக.
பாஸிடிவ் தொடக்கம்!
தமிழ்த் திரை உலககுக்கு மிகவும் பாஸிடிவாகத் தொடங்கியிருக்கிறது இந்த 2024. ஜனவரியில் வெளியானவற்றில் பலவும் வெற்றிப்படங்களாக அல்லது பேசப்படும் படங்களாகவே அமைந்தன.
யானை வெடி
யானை வெடி என்றவுடன் தீபாவளி நினைப்பு உங்களுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. யானை வெடி-1602. இதுதான் நான் என் உதவிக்கு வீட்டில் வைத்திருக்கும் வேலைக்கார - ரோபோட்டின் பெயர். என் வீடு இருப்பது நடுநாட்டில் கள்ளக் குறிச்சிக்கும் விருத்தாசலத்திற்கும் நடுவே கோண்டூர் கிராமம். எங்கள் ஊருக்கு வேலைக்கார ரோபோட் ஒன்றை வீட்டில் வைத்திருப்பது என்பது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் தனிக்கட்டையாக கல்யாணமே ஆகாமல் தங்கிப்போன சாதாரண ஆரம்பப்பள்ளி ஆசிரியரான எனக்கு ராணுவத்தில் பணியாற்றிய நண்பன் அன்பளிப்பாக கொடுத்தது என்பதால் ஊர் அதிகம் கண்டுகொள்வதில்லை. ஊர் முழுக்க கடன். என்னால் எதையும் விலைபோட்டு வாங்க முடியாது என்று ஊருக்கே தெரியும்.
இறங்கிய இரண்டாம் பாதி!
அக்டோபருக்குள் போவதற்கு முன் சென்ற மாத இறுதியில் வந்த சித்தா, சந்திரமுகி 2, இறைவன் ஆகிய மூன்று படங்கள் பற்றி பார்ப்போம்.
நாடகமான நான்கு சிறுகதைகள்!
எழுத்தாளர் இமையத்தின் நான்கு சிறுகதைகள் சமீபத்தில் சென்னையில் உள்ள மேடை அரங்கத்தில் நாடக வடிவத் தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட அவரது கதைகளில் ஒன்று 'தாலிமேல சத்தியம்'. ஊராட்சித் தலைவர் பதவித் தேர்தலில் வாக்குக்காக தலைக்கு 5000 எனப் பணம் கொடுத்தும் தோற்றுப்போனவன் வீடு வீடாக கொடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்கும் அபத்தத்தை கதையாக்கி இருப்பார். இதை மூன்றே பாத்திரங்களை வைத்து இடையிடையே கதை சொல்லல் பாணியில் கதையை நகர்த்திச் சென்று அருமையாக வடிவமைத்திருந்தார் நாடக இயக்குநர் பிரஸன்னா ராமசாமி.
என் சினிமா கதவை திறந்து விட்டவர்கள்!
'பாடல் எழுதுவது ன்னொரு வருக்கு வேலை செய்வது மாதிரி. கவிதை அப்படி அல்ல; அது நம் உயிர். நம்முடனே இருக்கும். நம்முடைய வாழ்க்கையை எழுதுவது.' என தெறிப்புச் சொற்கள் கலந்தபடி பேசுகிறார் பாடலாசிரியர் கபிலன்.
ஹேப்பி எண்டிங்!
மகிழ்ச்சியான தருணங்களை எப்படி கொண்டாடுவீர்கள் என அந்திமழை ஆசிரியர்கேட்டதும்கொஞ்சம்குழம்பி விட்டேன். பொதுவாக எல்லோருக்கும் எது மகிழ்ச்சியான தருணம் ? அது எப்போது வரும் ? பிறந்தநாள், திருமண நாள்(!?), அலுவலக ப்ரொமோஷன், காதலை ஒத்துக்கொண்ட தருணம், முதன் முதல் புணர்ந்த தருணம், குழந்தை உருவான தருணம், குழந்தை பிறந்த தருணம், சொந்த வீடு வாங்குவது, கார் வாங்குவது என லௌகீகமாக பலரும் சொல்வார்கள்.
அந்த அற்புதத் தருணம்!
ஐனவரி, 2005இல் இனி மேக் அப் போட்டு நடிக்கிறது இல்லனு முடிவு செஞ்சேன். 192 படங்கள், பல தொலைக் காட்சித் தொடர்கள் எல்லாம் நடிச்சாச்சு. இனி வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்.
தினந்தோறும் கொண்டாட்டம்!
'கலா சார்தான் முதலில் ஜெயிலர் படம் பார்த்தார். அனியும் நெல்சனும் அவர்கிட்ட படம் எப்படி இருக்குது என்று கேட்டார்கள். அனி, 'சார்... படம் பேட்ட மாதிரி வருமா' என்று கேட்டிருக்கிறார்.
இலக்கற்ற பயணங்கள் 4
சிங்கப்பூரிலிருந்து மூன்று மணிநேர விமானப்பயணத்தில் பாலி தீவைச் சென்று சேரலாம். இந்தோனேசியாவின் 18,100 தீவுகளில் பாலியும் ஒன்று. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளில் 6000 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்களாம். வழக்கமான கடற்கரைகளிலிருந்து மலைகளும் கடல்களும் இணைந்த நிலப்பரப்புகளைக் கொண்டது பாலி. அதுவே பாலியின் முதன்மையான கவர்ச்சி. மலைகளில் நின்று கொண்டு கடலைப் பார்ப்பதும் கடல் நடுவில் துருத்திக்கொண்டிருக்கும் மனித சஞ்சாரமில்லாத பெரும் பாறைத்திட்டுகளைப் பார்ப்பதும் பெரும் பரவசம் தரும் அனுபவங்கள். பாலி முழுக்க சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும் நகரம் என்று சொல்லலாம்.
என்னை மாட்டிவிட்டவர் ஏ.ஆர். ரஹ்மான்!
ராஜீவ் மேனன், இந்தியாவின் மிகச் ஒளிப்பதிவாளர்களின் சிறந்த முன்வரிசையில் இருப்பவர். ஆயிரக் கணக்கான விளம்பரப்படங்களை எழுதி இயக்கியவர். திரைப்பட இயக்குநர், வனவிலங்கு புகைப்படக் கலைஞர், செவ்வியல் இசை ஆர்வலர், பாடகர், திரைக்கலை ஆசிரியர், திரைப்பட நடிகர் எனப் பல முகங்கள் கொண்டவர். அவருடன் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி சென் நிகழ்த்திய உரையாடலில் பகிரப்பட்ட விஷயங்களின் சுருக்கமான எழுத்து வடிவம் இதோ.
“படம் செத்திருச்சு சார்!”
இயக்குநர் மிஷ்கின் நேர்காணல்
கதை எழுதி 1900 கோடி சம்பாதித்தவர்!
ஆங்கிலக் கதையுலகின் மாஸ்டரான ஜெப்ரே ஆர்ச்சர் The Traitors Gate என்ற தன்னுடைய புதிய நாவலை வெளியிட்டுள்ளார். லண்டனில் ஹாட்சர்ட்ஸ் என்கிற புத்தகக் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. பிரிட்டனில் உள்ள மிக வயதான புத்தகக் கடை இது. 1797இல் இருந்து இயங்குகிறதாம்.
"இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!"
'விஜய் ஆண்டனியும் நானும் கல்லூரி காலத்து நண்பர்கள். என் இரண்டாவது படத்தையே அவரை வைத்துதான் இயக்குவதாக இருந்தது. சில சூழல்களால், பத்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது 'ரத்தம்' படத்தில்தான் ணைய முடிந்தது'.
வெறுப்பை உமிழ்தல்!
இணைய உலகம் ஆப்-கள் என்கிற செயலிகளை முக்கியமாகக் கொண்டு இயங்குகிறது. யூடியூப், ட்விட்டர், பேஸ்புக்... போன்றவை அந்த தளங்களில் தரும் இடத்தில் நாம் பேசுகிறோம்.