
நிச்சயம் நம்மை ஏத்துப்பாங்க. நீ கலரா இருக்கியா... ஸ்டைலா இருக்கியானு எல்லாம் அவங்க ஒருபோதும் பார்க்கிறதில்ல. 'நல்லா நடி. உனக்கு சப்போர்ட் பண்றோம்'னு எதார்த்தமா இருக்காங்க.
அவங்கள நம்பிதான் 'சுந்தரி’ பண்ணிட்டு இருக்கேன்...” என ஊர்த் தமிழில் கலகலவெனச் சொல்லும் கேப்ரில்லாவிடம் நடிப்பிற்குள் எப்படி என்றதும், 'அதெ ஏன் கேட்குறீக...' எனச் சிரித்தபடி ஆரம்பித்தார்.
"திருச்சி அல்லித்துறைதான் என் சொந்த ஊர்.
அப்பா பீட்டரும், அம்மா மேரி கிளாராவும் பள்ளித் தலைமையாசிரியர்கள். நான்கு தலைமுறையாகவே ஆசிரியர் குடும்பம் தான்.
ஆனா, எனக்கு படிப்பு வரல. ஐந்து சப்ஜெக்ட்னா மூணுல ஃபெயிலாகிடுவேன்.
எனக்கு ஒரு அண்ணன் இருக்கார். அவர் பெயர் ஆண்டனி எடின்பரோ. என்னை விட ரெண்டு வயசு மூப்பு. அவர் ரொம்ப நல்லா படிப்பார். பி.இ முடிச்சிட்டு இப்ப சாப்ட்வேர்ல வொர்க் பண்றார். அவருக்குத் திருமணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு.
நான் சின்ன வயசுல ரொம்ப டிவி பார்ப்பேன். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்ற முதல் வார்த்தையே அதிகம் டிவி பார்க்கக் கூடாது என்பதுதான். ஆனா, நான் முக்கால்வாசி நேரம் டிவியில்தான் நேரத்தை செலவிட்டேன். எனக்கு சினிமாவுல சேரணும்னு ஆசை வரல. அந்த டிவிக்கு உள்ளே போய் நடிக்க ணும்னு நினைப்பேன்.
12ம் வகுப்பு முடிச்சதும் ஒரு காலேஜ்ல பி.ஏ ஆங்கிலம் சேர்ந்தேன். ஆறுமாசம்தான் போனேன். அதிலும் கிளாஸ்க்கு போகமாட்டேன். கல்ச்சுரல்ஸ்ல கலந்துப்பேன். அப்ப காலேஜ் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்ல இருந்தேன். ஸ்கிட், மைம்னு நிறைய பண்ணினேன்.
ஆரம்பத்துல அப்பா டான்ஸ் எல்லாம் ஆடக்கூடாதுனு சொன்னார். அதனால, வீட்டுக்குத் தெரியாமல் எழுதி வச்சிட்டு சென்னைக்கு ஓடி வந்துட்டேன். என் தோழி ஒருத்தி சென்னையில் இருந்தாள். அவள், 'இங்க வந்திடுடி. டான்ஸ் சேர்ந்து படிக்கலாம்'னு சொன்னதால நம்பி வந்தேன். ஊர்ல என்ன பேசுவாங்கனு கூட நினைக்கல. அதைவிட பெரிய தப்பு அம்மாவைப் பத்தி யோசிக்காமலே வந்ததுதான். ஆனா, இங்க வந்த அஞ்சு மணி நேரத்துல அப்பா அட்ரஸை கண்டுபிடிச்சு இரவோடு இரவா அழைச்சிட்டு போயிட்டார்.
Bu hikaye Kungumam dergisinin 12-08-2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 12-08-2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

பேக் இன் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.

நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.

ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?

நியூ இயர் டைரி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.

மிஸ் இந்தியா வணங்கான்!
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.

இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.

74 வயது மாணவி!
நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.

ரைசிங் ஸ்டார்...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.

கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.