விமல், கருணாஸ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார். இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.‘‘படத்துக்கும் என் சொந்த வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் அனுபவித்த வலியையும், வேதனையையும்தான் என்னுடைய கதாநாயகனும் அனுபவிக்கிறார்.
அது பலருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கும். அந்த வகையில் இது ரசிகர்களை சுலபமாக கனெக்ட் செய்யும் படமாக இருக்கும்...’’ உற்சாகமாக பேச ஆரம்பித்தார் இயக்குநர் மைக்கேல் கே.ராஜா. டைட்டில் நல்லாயிருக்கே?
இது டிராவல் கலந்த ஃபேமிலி டிராமா. 70 சதவீதம் டிராவல் கதையாக இருக்கும். அமரர் ஊர்தி ஓட்டுநரின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்தான் படம்.
‘அயோத்தி’ படத்துடன் சம்பந்தப்படுத்தி சிலர் பேசுகிறார்கள். ‘அயோத்தி’ படத்துக்கும் எங்கள் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 10 வருஷங்களுக்கு முன்பே இந்தப் படத்தோட பைலட் காப்பியை குருசோமசுந்தரம், விஸ்வந்த்தை வெச்சு எடுத்திருக்கிறேன். அந்தவகையில் இது ஃபிரஷ் ஸ்டோரி.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பிணத்துடன் அமரர் ஊர்தியில் பயணிக்கிறார் விமல். வழியில் கூத்துக் கலைஞர் கருணாஸ் சந்திப்பு நடக்கிறது. கருணாஸை ஏத்துக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. ஆனாலும் அவர் உதவி தேவை என்பதால் தொடர்ந்து டிராவல் பண்ணுகிறார் விமல். இரண்டு துருவங்களாக இருக்கும் அவர்களிடையே நட்பு மலர்கிறது. அதன் முடிவு என்ன என்பது க்ளைமாக்ஸ்.
ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் படத்தோட மெசேஜ். எல்லோரும் ஒவ்வொரு தேவைகளுக்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம். அவரவர் தேவை அவரவர்களுக்கு நியாயமா தெரியும். முழுமையா கெட்டவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. சந்தர்ப்பம், சூழ்நிலையால் அவர்களுடைய செயல்கள் நம்முடைய பார்வைக்கு கெட்டவர்கள் போல் தெரிவதுண்டு. அதை முடிந்தளவுக்கு யதார்த்தமா சொல்ல முயற்சித்துள்ளேன்.
முதல் படமா இந்தக் கதையை தேர்வு செய்ய என்ன காரணம்?
வழக்கமான, பார்த்து புளிச்சுப்போன கதைகள் பண்ணுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எப்போது படம் பண்ணினாலும் ரசிகர்களுக்கு புது அனுபவம் தரணும் என்ற ஐடியாவுல இருந்தேன்.
Bu hikaye Kungumam dergisinin 07-06-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 07-06-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.