ஆனால், தலை கனத்து பெரிய வலி வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. உடல் களைக்கவில்லை, மூளைதான் களைத்திருக்கிறது என்பது புரிந்தது.
என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் பெட்டியை எடுத்து கட்டில் மேல் வைத்தாள். நாலைந்து நாட்களுக்கான துணி எடுத்துக்கொள்ளலாமா? அப்படியென்றால் நாலைந்து நாட்களில் சரியாகிவிடும் என்று நினைக்கிறேனா? சரியாக வேண்டும் என்றாவது நினைக்கிறேனா? இனிமேல் அவனுடன் வாழ முடியும் என்று நினைக்கிறேனா?
Irreversible. தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். இது வழக்கமாக வரும் பிரச்னை இல்லை. அவன் எல்லை மீறிவிட்டான். நானும்தான். ஆனால், முதலில் எல்லை மீறியது அவன்தான்.
தொட்டிலில் குழந்தை சிணுங்கும் சத்தம் கேட்டது. பால் கொடுக்கும் நேரம். குழந்தை. என் நிலைமைக்கு இது தேவையா?
கல்யாணம் ஆனதுதான் தெரியும். மறுமாதமே கர்ப்பக்கருவியில் இரு கோடுகள். ஆனால், அப்போதெல்லாம் தெரியாது இவன் இந்த எல்லைக்கெல்லாம் போவான் என்று.
குழந்தையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாள். நான்கு மாதங்களில் முகம் பார்க்கத் தெரிந்துவிட்டிருந்தது. சிணுங்கல் குறையாமலேயே வாய் நிறையச் சிரித்தது.
குழந்தையின் சிரிப்பு ஒரு தொற்று. மனத்தின் தீவிரக் கவலையையும் மீறி முகம் புன்னகைத்தது. அவன் பார்த்துவிடப் போகிறான் என்று அனிச்சையாக வாசலைப் பார்த்தாள்.
ஏன்? சிரிக்கக் கூடாதா? அதற்குக்கூட உரிமையில்லாத அடிமையா நான்? இப்போதும் அவனைக் காணோம். வெளியே கிளம்பிவிட்டான்.
நண்பர்களைப் பார்ப்பான். ஏன், பாருக்குக் கூட போயிருப்பான். அங்கே அவன் சிரிக்க மாட்டானா? தன்னை நம்பி வந்த ஜீவனைக் கதறவிட்டு வந்திருக்கிறோமே என்று கொஞ்சமாவது யோசிப்பானா? கிரிக்கெட் புட்பால் என்று கிட்டிப்புள் வரை எல்லா விளையாட்டையும் அலசுவான்கள்.
Bu hikaye Kungumam dergisinin 28-06-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 28-06-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.