கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய அவர், தமிழ்த் திரையுலகம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் அதே வேளையில், வட மாநிலங்கள் பாலிவுட்டால் இருட்டடிப்பு செய்யப்படுவதாகக் கூறினார்.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, சீமாந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் செழிப்பான திரைப்படத் தொழில்கள், வட மாநிலங்களை விட சிறந்து விளங்குகின்றன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். “தமிழ்த் திரையுலகம் இப்போது கோடிக்கணக்கான வருவாய் ஈட்டுகிறது. கேரளா, தெலுங்கு, கன்னட சினிமாவும் செழித்து வருகிறது...” என்றார்.
வட இந்தியாவில் ஒப்பிடக்கூடிய திரைப்படத் துறை இருப்பதைக் கேள்விக்குட்படுத்திய அவர், “வட இந்தியாவில் எந்த மொழியிலும் நம்மைப் போல துடிப்பான தொழில் உள்ளதா? என்றால் இல்லை என்பதே பதில்...’’ என்றார்.
உண்மை அதுதான். வட இந்தியாவின் சினிமா ஹப்பாக விளங்கும் மும்பை நகரம் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவின் மாநில மொழி மராத்தி. ஆனால், அங்கேயும் இந்தி மொழி படங்களுக்குத்தான் முன்னுரிமை. காலம் காலமாகவே இந்த மோனோபொலி நிலை தவிர்க்க முடியாத ஒன்றாகவே வட மாநிலங்களில் இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவின் சினிமா வளர்ச்சி முதன்முதலில் இந்தி மொழியில்தான் - 1930களில் - தொடங்கியது என்பதுதான் முதல் காரணம்.
இதற்கிடையில் பிரிவினை மற்றும் கலவரம் என மற்ற மொழிகள் பிசியாக இருந்த அதே வேளையில் பாலிவுட் உலகம் தனது சினிமா தொழிலை பெருக்கிக் கொண்டிருந்தது. இதுதவிர இந்தி மொழி மோனோபோலி நிலைக்குப் பின்னணியில் பல துணை மோனோபோலிகள் இருப்பதும் இன்னொரு காரணம்.
தயாரிப்பு மற்றும் ஸ்டூடியோ மோனோபோலிகளான ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’, ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’, ‘எக்ஸெல் என்டர்டெயின்மென்ட்’ ஆகிய இந்த மூன்று தயாரிப்பு ஸ்டூடியோக்களை பிரதானமாகக் கொண்டு வட இந்திய சினிமா இயங்குகிறது.
தொடர்ந்து ஸ்டார் மோனோபோலி. கான், கபூர் என்னும் இரு குடும்பங்களிடம்தான் பாலிவுட் உலகம் பிரதானமாக இருக்கின்றது.
அடுத்து தியேட்டர் மோனோபோலி. பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் உள்ளிட்ட இரு மல்டிபிளக்ஸ் செயின்களையும் கட்டுப்படுத்தும் நிர்வாகத்துறையும் பாலிவுட் குழுவிடம்தான் உள்ளன.
Bu hikaye Kungumam dergisinin 22-11-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 22-11-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.