DeneGOLD- Free

களைகட்டும் மகா கும்பமேளா..

Kungumam|21-02-2025
கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் அத்தனை ஊடகங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் செய்தி பிரயாக்ராஜில் (முந்தைய பெயர் அலகாபாத்) நடந்துவரும் மகா கும்பமேளாதான்.
- பேராச்சி கண்ணன்
களைகட்டும் மகா கும்பமேளா..

இது பட்ஜெட் பரபரப்பை விட விஞ்சிவிட்டது என்றால் வியப்பில்லை.

ஆரம்பத்தில் இந்தக் கும்பமேளாவிற்கு வந்த அகோரிகளும், நாக சாதுக்களும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டனர். பின்னர் பாசிமணி விற்ற பெண்மணி ஒருவர் புகழ்பெற்றார்.

இதனையடுத்து நடிகை மம்தா குல்கர்னி துறவறம் பூண்டதும், பின்னர் அந்த அமைப்பிலிருந்தே அவர் நீக்கப்பட்டதும் பேசுபொருளாகின. தொடர்ந்து தை அமாவாசை அன்று இரவில் புனித நீராட கூட்டமாகத் திரண்ட பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தது இந்தியாவை உலுக்கியது.

பிறகு பிரதமர் மோடி உள்பட பல்வேறு விவிஐபிகள் புனித நீராடினர். குறிப்பாக ஒன்றிய அமைச்சர்கள், பூடான் அரசர், பல்வேறு நாட்டைச் சேர்ந்த தூதர்கள் எனப் பலர் கும்பமேளாவில் கலந்துகொண்டு பூஜித்தனர். இப்படி நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமுமாக மகா கும்பமேளா நடந்து வருகிறது.

கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்வு பிப்ரவரி 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 நாட்கள் கொண்ட இந்த மகா கும்பமேளா பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

கும்பமேளா என்பது...

பொதுவாக கும்பமேளா, உலகின் ஓர் அமைதியான ஆன்மிக திருவிழா என வர்ணிக்கப்படுகிறது. குறிப்பாக பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து தங்கள் ஆன்மாக்களை விடுவித்து, உலகில் உள்ள தீமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக கோடிக் கணக்கான பக்தர்கள் இந்தக் கும்பமேளாவில் கூடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர்.

புராணத்தின்படி, பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தின் புனித குடத்திற்காக (கும்பம்) தேவர்கள், அசுரர்கள் இடையே போர் நடந்தது. அப்போது பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்த கும்பத்தை எடுத்துச் சென்றார்.

அப்போது அதன் சில துளிகள் பூமியின் ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் மற்றும் பிரயாக்ராஜ் என நான்கு புனித தலங்களில் விழுந்தன.

பகவான் விஷ்ணுவின் இந்தப் பயணம் 12 நாட்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. இது 12 மனித ஆண்டுகளுக்குச் சமம். இதனைக் கொண்டாடும் விதமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதே கும்பமேளா.

இதில் அமிர்தம் விழுந்ததாகச் சொல்லப்படும் இந்த நான்கு நகரங்களில் நடைபெறும் கும்பமேளாவே சிறப்பு வாய்ந்ததெனக் கொண்டாடப்படுகிறது. இதிலும் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா கூடுதல் சிறப்பைக் கொண்டுள்ளது.

Bu hikaye Kungumam dergisinin 21-02-2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kungumam dergisinin 21-02-2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KUNGUMAM DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
Kungumam

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?

அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது

time-read
1 min  |
28-02-2025
தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?
Kungumam

தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?

இப்படியொரு கேள்வியைத்தான் ஒன்றிய அரசு இப்பொழுது பொது மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய நாடாளுமன்றத்தில் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

time-read
2 dak  |
28-02-2025
கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!
Kungumam

கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!

பிரகலாதனி அம்மாதான் கயாது!

time-read
2 dak  |
28-02-2025
ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
Kungumam

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனம் ‘உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது?’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

time-read
1 min  |
28-02-2025
2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்
Kungumam

2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்

ஆம். ஒன்றல்ல இரண்டல்ல... ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 8 வருடங்களாக இந்த துணையைத் தேடும் பயணத்திலேயே தங்கிவிட்டார்.

time-read
1 min  |
28-02-2025
ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?
Kungumam

ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?

செங்கனி‘ஜெய்பீம்’ செங்கனியாக தமிழ் சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் லிஜோமோல்.

time-read
3 dak  |
28-02-2025
இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!
Kungumam

இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு போட்டு டிரம்ப் அரசு விமானத்தில் திருப்பி அனுப்பியது நாட்டையே குலுக்கியது.

time-read
1 min  |
28-02-2025
அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!
Kungumam

அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!

புதுமுகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைபோட ஆசைப்படுவார்கள். காரணம், ஹீரோக்களுக்கு எப்போதும் பேர் வாங்கித் தருவது ஆக்‌ஷன் படங்கள்தான். அந்த வகையில் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராகத் திகழ்கிறார் சுப்ரீம் சுந்தர்.

time-read
3 dak  |
28-02-2025
வைரல் நெக்லஸ்!
Kungumam

வைரல் நெக்லஸ்!

சோஷியல் மீடியாவில் நெக்லஸ் வைரலாகும். அதுவும் செலிபிரிட்டியின் நெக்லஸ் என்றால் வைரலோ வைரலாகும். செலிபிரிட்டியிலும் பிரியங்கா சோப்ரா என்றால் இன்ஃபினிட்டி வைரல் ஆகும்!

time-read
1 min  |
28-02-2025
6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்
Kungumam

6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்

இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்

time-read
3 dak  |
28-02-2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more