
விரைவில் தேர்தல் வரப்போகிறது என்கிற நிலையில் அதற்குப் பயன்படுமே என்று எங்களுடைய செய்தித்துறையின் மூலம் ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். அந்தப் படத்தைப் பார்த்ததற்குப் பிறகு நாங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியடைந்தோம்; ஆளுநரும் அதிர்ச்சியடைந்தார். இந்த அதிர்ச்சியைவிட எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது செல்வி. ஜெலலிதா அவர்கள் செய்த சதி வேலைகள்தான்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், புரூக் ளின் மருத்துவமனையில் டாக்டர் ப்ரீட்மேன் அவர்கள் தலைமையில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் குழு, புரட்சித் தலைவர் அவர்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை அளித்தார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்குள் புரட்சித் தலைவரின் உடல்நிலையில் அதிசயத் தக்க வகையில், மருத்துவர்களே ஆச்சர்யப்படும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்த நேரத்தில்தான்... எதிர்பாராமல் அன்னை இந்திராகாந்தி அவர்கள் சுட்டுக் கொல் லப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நடத்து வது என்கிற முடிவை எடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் பாக்கியிருந்தன. ஜுன் மாதம்தான் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும்; என் அதோடு சேர்த்து சட்டமன்றத் தேர்த நடத்திவிடலாம் என்று நான் நினைத் தேன். அன்றைக்கு பொறுப்பேற்றுக்கொண் டிருந்த மூத்த அமைச்சர் நாவலரிடமும், மற்ற வர்களிடமும் சொல்லி அந்த முடிவை எடுப் பதற்காக அமைச்சரவை கூட்டப்பட்டது. ஆனால் அமைச்சரவையில் அனுபவமிக்க அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர், இந்தத் தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என்று எண்ணினார்கள்.
அழுத்தத்தோடு பேசத் தொடங்கி னேன்... 'இரண்டு தேர்தலையும் ஒன்றாக இணைத்துதான் நடத்த வேண்டும்' என்று அழுத்தமாக, உறுதியாக நான் பேசியதற்குப் பிறகு எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அமைச்சரவையின் முடிவை மத்திய அரசாங் கத்திற்கு அறிவித்தோம். மத்திய அரசாங்கமும் சட்டமன்றத் தேர்தலை சேர்த்து நடத்துவதற்கு ஒத்துக் கொண்டது. தேர்தல் வேலைகளில் ஈடுபட்டோம். வேட்பாளர் தேர்வுகள் நடைபெற்றன. நல்லவேளையாக ஜெயலலிதா அவர்கள் ஆட்சிமன்றக் குழுவிலோ தலைமைக் கழக நிர்வாகத்திலோ இல்லாத காரணத்தினால்
இந்தத் தேர்தல் நடவடிக்கைகளிலே நேரிடை யாக அவர்களாலே குறுக்கிட முடியவில்லை.
Bu hikaye Nakkheeran dergisinin October 23-25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin October 23-25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?
இவையெல்லாம் உரிமைகளாக பெற்றவை என்பதைக்கூட அறிய முடியாத அளவுக்கு நாம் வசதியாக வாழும் இந்த வாழ்வு, சமூகம், நமக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், வழிபாடுகள் போன்றவை யாவும் நமக்கிருந்திராத காலத்தை கற்பனை செய்து பாருங்கள்.

த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!
பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டி த.வெ.க. வட்டாரத்தை கதிகலங்கச் செய்துள்ளது.

மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!
பெரிய கல்வி நிறுவனங்கள், குழந்தைகள் விடுதிகள், ஆசிரமங்களில் பெண் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்தால், தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாதென்பதற்காக விசாரணை அதிகாரிகளுக்கு பணத்தைக்கொடுத்து சரிக்கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

தலைவர்களின் பலமும் பலவீனமும்!
தனி நபருக்கானாலும், கட்சிகளுக்கானாலும், ஆட்சிகளுக்கானாலும், ஒரு சமூகத்துக்கானாலும் மிகவும் ஜாக்கிரதையாகக் கண்காணிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். இதை அண்ணா இப்படிச் சொன்னார்....

முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!
ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள், அனைத்துத் தரப்பாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.\"

போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்
'போக்ஸோ வழக்கின் எப்.ஐ.ஆர். நகல் தருகின்றோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என அழைத்து, 'ஜக்கியைப் பற்றி, ஈஷாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாதென' பாதிக்கப்பட்டோரை மிரட்டி எழுதி வாங்கி அனுப்பியிருக்கின்றது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம். சரி... எப்.ஐ.ஆர். நகலாவது தந்தார்களா, என்றால் அதுவும் இல்லை.

3வது உலகப் போர் மூளுமா?
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தை காரசார விவாதமானதால், சர்வதேச அளவில் பதட்டம் கிளம்பியுள்ளது!

மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!
நிர்வாண மசாஜ், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டல் என காவல்துறை உயர் அதிகாரிகள் ஆசியுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டானாக வலம் வந்துகொண்டிருந்த நாகர்கோவில் விஜய்ஆனந்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது குமரி காவல்துறை.

கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!
கடந்த மாதம் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது கலெக்டராக சரவணன் பொறுப்பேற்ற வுடனே மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளுக்கும் அதிரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கோரிக்கைகளைக் கேட்டது மட்டு மல்லாமல், பல்வேறு துறைகளுக்கு சென்று விசிட்டடித்து, ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளையும் பார்வை யிட்டு, சரியாக செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக் கிறார்.

நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!
திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமியின் அலுவலகத்தில், பெங்களுரூவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமர்ந்துகொண்டு அரசு ஊழியர்களை மிரட்டுவ தாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.