CATEGORIES
Kategoriler
இந்தியாவை அவமதிப்பவரை பாராட்ட முடியாது
ராகுல் குறித்து குடியரசு துணைத் தலைவர் சூசக விமர்சனம்
அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னுன் வழக்கு: இந்தியா நிராகரிப்பு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாகவும், தன்னையும் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகவும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் குா்பத்வந்த் சிங் பன்னுன் தொடா்ந்த வழக்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.
கொலீஜியம் பரிந்துரைகளை அமல்படுத்த தாமதம் ஏன்?
அடுத்த வாரம் தெரிவிப்பதாக மத்திய அரசு தகவல்
பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்
அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு
கங்கைகொண்டான் சிப்காட்டில் 500 பெண் பணியாளர்கள் தங்கும் வசதி
அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகள்: அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் மாணவா்கள் மத்தியில் பேசுவதற்கு சா்ச்சைக்குரிய நபா்களை அழைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கியுள்ளாா்.
தமிழக மருத்துவத் திட்டங்கள்: ஆஸ்திரேலிய தூதர் பாராட்டு
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மருத்துவத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதா் சிலாய் ஸாகி, அதற்கு பாராட்டு தெரிவித்தாா்.
ரயில் நிலையங்களில் தொடர்ந்து பழுதாகும் நகரும் மின்படிக்கட்டுகள்
சென்னையில் எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களில் நகரும் மின்படிக்கட்டுகள் தொடா்ந்து பழுதடைவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
தமிழகத்தின் தினசரி மின் தேவை 20,000 மெகாவாட்டாக உயர்வு
தனியாரிடம் 1,000 மெகாவாட் கொள்முதல்
23 மாணவிகளுக்கு கருணைத் தொகை
கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம்
ஒரே நாடு-ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமற்றது
ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டம் நடைமுறை சாத்தியமற்றது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து
ஸ்ரீநகர் பிரசாரத்தில் பிரதமர் மோடி உறுதி
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.
பாராலிம்பிக்கில் பதக்கம் பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு பரிசு
பாரீஸ் பாராலிம்ப்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் ரொக்க பரிசுகளை வழங்கினாா்.
மாநில உரிமைகளுக்காக சட்ட முன்னெடுப்புகள்: முதல்வர் உறுதி
மாநில அரசுகளை அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
கொல்கத்தா புதிய காவல் ஆணையர் மனோஜ் வர்மா
கொல்கத்தா நகர புதிய காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் வா்மா செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.
‘புல்டோசர்’ நடவடிக்கை: அக்.1 வரை தடை
நாடு முழுவதும் குற்றச் சம்பவத்தில் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவோர் உள்ளிட்டோருக்குச் சொந்தமான கட்டடங்களை, தின் உச்சநீதிமன்றத் அனுமதியின்றி புல்டோசர் மூலம் இடிக்க அக்டோபர் 1-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தில்லி புதிய முதல்வர் அதிஷி
தில்லி முதல் வர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனாவிடம் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அளித்தார்.
ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்
ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தலிபான் ஆட்சி யாளர்கள் அறிவித்துள்ளனர்.
58 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய இரண்டாவது முறையாக நடைபெற்ற முயற்சி தொடா்பாக ரியான் வெஸ்லி ரூத் (58) என்பவா் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இறுதிச் சுற்றில் இந்தியா-சீனா மோதல்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-சீனாவும் மோதவுள்ளனா்.