CATEGORIES
Kategoriler
சட்டப் பல்கலை.யில் அரசுப் பள்ளி மாணவர்கள்: துணைவேந்தருடன் கலந்துரையாடினர்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் சென்னை அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டு அதன் துணைவேந்தருடன் கலந்துரையாடினர்.
நிதிப் பற்றாக்குறை நிலையிலும் சீரான வளர்ச்சிப் பணிகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
வேளச்சேரி பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
சென்னை வேளச்சேரி பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருமலையில் புஷ்ப யாகம்: 9 டன் மலர்களால் அபிஷேகம்
திருமலை எழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சனிக்கிழமை புஷ்பயாகம் நடைபெற்றது.
நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி: தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர்: தீவிரவாதிகள் சுட்டதில் பெண் உயிரிழப்பு
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 14 பேர், பொதுமக்கள் 13 பேர் என மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர். 62 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் பட்டாசு ஆலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
விருதுநகர், நவ. 9: விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
'கங்குவா' திரைப்படத்தை வெளியிடத் தடையில்லை
ரிலையன்ஸுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக செலுத்திவிட்டதால், அந்நிறுவனத்தின் தயாரிப்பான 'கங்குவா' திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை பேராசிரியர் மா.செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ்
சிமென்ட் விலை குறைந்ததன் காரணமாக நிகர இழப்பு அதிகரித்துள்ளது என்று இந்தியா சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்
ஆம்ஸ்டர்டாம்,நவ. 8: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகர்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவர் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
16 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
வாஷிங்டன் நவ. 8: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபர் ஜே பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இஸ்ரேலுக்கு உணர்ச்சிபூர்வ பதிலடி கூடாது
தங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு உணா்ச்சிபூா்வமாக பதிலடி கொடுக்கக் கூடாது என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் பாதுகாப்பு ஆலோசகா் அலி லரிஜானி எச்சரித்துள்ளாா்.
வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலர்
டிரம்ப் அறிவிப்பு
சமூக வலைதளங்கள், இணைய வழி விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்
புது தில்லி, நவ.8: சமூக வலைதளங்கள், இணைய வழி விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு சிறார் அடிமையாகி விட்டதாகவும் இதனால் கோபம், பொறுமையின்மை மற்றும் சோர்வு என அவர்களின் நடத்தை யில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
WPL மகளிர் பிரீமியர் லீக்: 71 பேர் தக்கவைப்பு
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில், 3-ஆவது சீசனுக்கு காக தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியல் வெளியானது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
அடிலெய்டு, நவ. 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா
சாம்சன் அதிரடி; வருண், பிஷ்னோய் அசத்தல்
3-ஆவது வெற்றியுடன் முதலிடத்தில் அர்ஜுன்
சேலஞ்சர்ஸில் அசத்தும் பிரணவ்
பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு'
குஜராத் தொழிலதிபரின் வினோத செயல்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் யோகா, ஆயுர்வேத சிகிச்சை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி, நவ.8: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் யோகா, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை சேர்க்கக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சத்தீஸ்கர்: 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 நக்சல் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவுக்கு வல்லரசு தகுதி
ரஷிய அதிபர் புதின் பாராட்டு
ஹரியாணாவைப் போன்று மகாராஷ்டிரத்திலும் எதிர்க்கட்சிகள் தோற்கும்
அண்மையில் ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதுபோல, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியை பாஜக கூட்டணி தோற்கடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.