CATEGORIES
Kategoriler

கும்பமேளா சம்பவம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கும்பமேளா பக்தர்களின் பாதுகாப்புக்கு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு
மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததையடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்த வழிகாட்டுதல்களை வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்
சென்னை அருகே நடைபெறும் நிகழ்ச்சிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வருகையையொட்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை (ஜன. 31) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
சிரியா அதிபராக அல்-ஷரா அறிவிப்பு
சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது அல்-ஷரா, அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்?
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி (காவல் துணைக் கண்காணிப்பாளர்) விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கும்பமேளா சம்பவம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்-மத்திய அரசு

உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகை
சென்னையில் நடைபெறவுள்ள முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (ஜன. 31) சென்னை வரவுள்ளார்.
53% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை
கடந்த 2024-ஆம் ஆண்டில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆண்டுக்கு 15 லட்சம் வெளிநாட்டவர் சிகிச்சைக்காக தமிழகம் வருகை
மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆண்டுதோறும் 70 நாடுகளில் இருந்து 15 லட்சம் பேர் தமிழகம் வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சண்டிகர் மேயர் தேர்தல்: மாற்றுக் கட்சியினர் வாக்குகளால் பாஜக வெற்றி
சண்டிகர் மேயர் தேர்தலில் மாற்றுக் கட்சியினர் வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றது.
காமராஜர் பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு: திரும்பப் பெற அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர். என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

கிண்டி சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான புத்தகக் காட்சி தொடக்கம்
சிறுவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சிறுவர்களுக்கான புத்தகக் காட்சியை, கிண்டி சிறுவர் பூங்காவில் வன உயிரினக் காப்பாளர் மணிஷ் மீனா தொடங்கி வைத்தார்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: இங்கிலாந்துடன் இன்று 4-ஆவது டி20
டி20 தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இந்தியா வெள்ளிக்கிழமை களம் காண்கிறது.
மகாத்மா காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி
மகாத்மா காந்தியின் 77-ஆவது நினைவு தினத்தை யொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

ஹெலிகாப்டர் - விமானம் மோதல்: 67 பேர் உயிரிழப்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரர்களுடன் வந்த ராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை (ஜன.29) இரவு மோதி வெடித்துச் சிதறியதில் மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர்.

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வியாழக்கிழமை தமிழகம் 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

மணப்பாறையில் 24 மாநிலங்கள், 4 நாடுகளின் சாரணர்கள் பங்கேற்ற ஒற்றுமைப் பேரணி
மணப்பாறையில், பாரத சாரணர், சாரணியர் இயக்கத்தின் 24 மாநிலங்கள் மற்றும் 4 நாடுகளைச் சேர்ந்த சாரணர், சாரணியர் இயக்கத்தினர் பங்கேற்ற தேசிய ஒற்றுமைப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்செக்ஸ், நிஃப்டி மூன்றாவது நாளாக லாபத்தில் முடிவு
பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் 'காளை' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன.
தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டம்: ஜார்க்கண்ட் 84 ரன்கள் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 84 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

கோலியைக் காண குவிந்த ரசிகர்கள்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ரயில்வேஸுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியைக்காண, தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர்.
சுரங்கப் பாதை அமைக்கக் கோரி சாலை மறியல்: முன்னாள் அமைச்சர் உள்பட 200 பேர் கைது
திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச் சாலையில் ஆலம்பட்டி அருகே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி, கிராம மக்களுடன் இணைந்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவரிடம் விசாரணை
சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி ஆண்டுவிழா
மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டுவிழா, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிஜ்ஜார் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்
நிஜ்ஜார் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடர்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று தில்லியில் உள்ள கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் பிப்.2-இல் திறப்பு
சிவபூமி அறக்கட்டளை சார்பில் இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) நடைபெறவுள்ளது.

உஸ்மான் காஜா இரட்டைச் சதம்; ஆஸ்திரேலியா 654 ரன்கள் குவிப்பு
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 654 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது.

ஸ்வீடன்: திருக்குர்ஆனை எரித்தவர் சுட்டுக் கொலை
ஸ்வீடனில் ஆர்ப்பாட்டங்களின்போது திருக்குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோரமண்டல் இன்டர்நேஷனல் வருவாய் 28 சதவீதம் அதிகரிப்பு
கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வருவாய் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் தந்தை மரணம்: தட்டிக் கேட்ட மகள் அடித்துக் கொலை
வீட்டில் உடல்களை பூட்டி வைத்த மருத்துவர் கைது

நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை
வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு