தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
முன்னதாக, அவரிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக சிபிஐ விசாரணை நடத்தியது. 2021-22-ஆம் ஆண்டு தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி அரசின் கலால் துறை இலாகாவுக்கு பொறுப்பு வகித்த மனீஷ் சிசோடியா முதல் நபராக சேர்க்கப்பட்டிருந்தார். மேலும், கலால் ஆணையர் ஆரவ கோபி கிருஷ்ணா, கலால் துணை ஆணையர் ஆனந்த் குமார் திவாரி, உதவி கலால் ஆணையர் பங்கஜ் பட்நாகர், ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமானவரும் ஓஎம்எல் கேளிக்கை நிகழ்வு மேலாண்மை நிறுவன அதிகாரியுமான விஜய் நாயர் மற்றும் தொழிலதிபர்கள், 2 நிறுவனங்கள் மீதும் கடந்த ஆகஸ்ட் 17 -ஆம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.
கடந்த ஆண்டு அக். 17- ஆம் தேதியும் சிபிஐ விசாரணைக்கு சிசோடியா ஆஜரானார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. ஆனால், அதில் சிசோடியா பெயர் இடம்பெறவில்லை. தொடர் விசாரணைக்கு பின்னர் இரண்டாவது முறையாக சிபிஐ கடந்த 19-ஆம் தேதி அவரை விசாரணைக்கு அழைத்திருந்தது.
Bu hikaye Dinamani Chennai dergisinin February 27, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin February 27, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நாங்கள் ஓயமாட்டோம்!
இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.
திருப்பதி லட்டுகளில் கலப்படம்: 9 பேர் சிறப்பு விசாரணைக் குழு
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்து முழுமையாக விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) ஆந்திர அரசு அமைத்துள்ளது.
சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு
தில்லியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு
நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியா் முனைவா் அலெக்சாண்டா் துன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்
உலக சுற்றுலா தின விழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.
நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி
சிறந்த மாணவா்களையும் தாண்டி நல்ல மனிதா்களை உருவாக்குவதே ஓா் ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் தனியாா் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.