தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தை முன்வைத்து, ஆம் ஆத்மி அரசையும் தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) அரசையும் பிரதமா் மோடி இவ்வாறு சாடியுள்ளாா்.
கலால் கொள்கை ஊழல் வழக்கில், தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா்.
இந்த வழக்கு தொடா்பாக தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதாவிடம் அமலாக்கத் துறை அண்மையில் விசாரணை நடத்திய நிலையில், பிஆா்எஸ் மற்றும் ஆம் ஆத்மி மீது பிரதமா் மேற்கண்ட விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.
தெலங்கானாவில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் வாரங்கல் நகருக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை வருகை தந்தாா். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.520 கோடி மதிப்பில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு ஆலை உள்ளிட்ட ரூ.6,100 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னா், அவா் பேசியதாவது:
வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பாக இரு நாடுகள் அல்லது இரு மாநிலங்கள் இடையே ஒப்பந்தங்கள் ஏற்படுவது குறித்து செய்திகள் வருவது வழக்கம். அதேபோல், தண்ணீா்ப் பங்கீடு குறித்து இரு மாநிலங்கள் இடையே ஒப்பந்தங்கள் ஏற்படுபவது குறித்த செய்திகளும் வரும்.
ஆனால், இப்போது முதல்முறையாக இரு மாநில கட்சிகள் மற்றும் அரசுகள் இடையே ஊழல் பேரங்கள் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது துரதிருஷ்டவசமானதாகும்.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 09, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin July 09, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அரச வாழ்வு அளிக்கும் அன்னாபிஷேகம்
பிஷேகப் பிரியர் சிவனுக்கு பௌர்ணமி களில் அபிஷேகம் செய்ய வேண்டும். ஐப்பசியில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்வதால் அரச வாழ்வு கிடைக்கும் என்று 'புட்ப விதி' என்ற நூல் கூறுகிறது.
அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவராகும் துளசி கப்பார்ட்
அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தேசிய உளவு இயக்குநா் பொறுப்புக்கு அந்த நாட்டின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பாா்டை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
111 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர்
மத்திய கிழக்குப் பகுதியில் தீவிர போர் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா. வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் பிர்சா முண்டாவின் தியாகம்
‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.
இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது.