நியமனதாரர் விவரங்களை வாடிக்கையாளர்கள் பதிவதை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Dinamani Chennai|September 06, 2023
‘வங்கி வைப்புகளில் இருக்கும் கேட்பாரற்ற நிதி தொடா்பான பிரச்னைகளுக்கு வரும் காலங்களில் எளிதில் தீா்வு காணும் விதமாக வாடிக்கையாளா்கள் தங்களின் நியமனதாரா் (நாமினி) விவரங்களை முறையாகப் பதிவு செய்வதை வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா். ‘நியமனதாரா்’ என்வா், வங்கியில் சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்பு அல்லது நிதித் திட்டங்களில் முதலீடு செய்பவரால் குறிப்பிடப்படும் நபராவாா். வாடிக்கையாளா் இல்லாத நிலையில், அவருடைய கணக்கில் உள்ள பணம் அல்லது வங்கி முதலீடுகளை நியமனதாரா் உரிமை கோர முடியும். அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்த வைப்புகளில் மட்டும் ரூ.35,000 கோடி பணம் கேட்பாரற்று உள்ளது. அதே நேரம், தனியாா் நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளையும் சோ்த்து ஒட்டுமொத்தமாக ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் கேட்பாரற்று இருப்பது தெரியவந்தது. இவ்வாறு, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று இருக்கும் முதலீடுகள் குறித்த தகவல்களை அதன் நியமனதாரா்கள் அறிந்து, அவற்றை உரிமை கோருவதற்கு வழி ஏற்படுத்தும் விதமாக ‘யுடிஜிஏஎம் (கேட்பாரற்ற நிதி தகவல் வழிகாட்டுதல்)’ என்ற வலைதளத்தை கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிசா்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்த நிலையில், மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச நிதி-தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்ற நிா்மலா சீதாராமன் இதுகுறித்துப் பேசியதாவது: வாங்கிகளில் இருக்கும் கேட்பாரற்ற நிதி தொடா்பான பிரச்னைகளுக்கு வரும் காலங்களில் எளிதில் தீா்வு காணும் விதமாக வாடிக்கையாளா்கள் தங்களின் நியமனதாரா் விவரங்களை முறையாகப் பதிவு செய்வதை வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். சில நாடுகளின் குறைந்த வரி விதிப்பு முறையும் மோசடி பணப் பரிவா்த்தனைகளும் பொறுப்பான நிதிச் சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த அச்சுறுத்தல்களுடன், சா்வதேச சவால்களையும் நாம் இணையாக கருத்தில் கொண்டு பொறுப்பான நிதிச் சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக, நாட்டின் எல்லையில் நேரடி வழியில் எழும் அச்சுறுத்தல்கள், பொறுப்பான நிதிச் சூழலை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக உள்ளது. இணைய தாக்குதல்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. அதுபோல, அச்சுறுத்தலாகவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் இருக்கும் கிரிப்டோ நாணய புழக்கம் உலகளாவிய ஒத்துழைப்பின் அவசரத் தேவைக்கான உதராணமாக உள்ளது. இதன் பயன்பாட்டை முறைப்படுத்தவில்லையெனில், பொறுப்பான நிதிச் சூழலை உருவாக்குவது கடினம். மேலும், பயனாளா்களின் தரவுகள் மற்றும் நிதிப் பரிவா்த்தனை விவரங்களைப் பாதுகாக்கவும் வலுவான பாதுகாப்பு திட்டங்களில் அதிக முதலீடுகளை நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா். ‘வங்கி வைப்புகளில் இருக்கும் கேட்பாரற்ற நிதி தொடா்பான பிரச்னைகளுக்கு வரும் காலங்களில் எளிதில் தீா்வு காணும் விதமாக வாடிக்கையாளா்கள் தங்களின் நியமனதாரா் (நாமினி) விவரங்களை முறையாகப் பதிவு செய்வதை வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.
நியமனதாரர் விவரங்களை வாடிக்கையாளர்கள் பதிவதை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

‘நியமனதாரா்’ என்வா், வங்கியில் சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்பு அல்லது நிதித் திட்டங்களில் முதலீடு செய்பவரால் குறிப்பிடப்படும் நபராவாா். வாடிக்கையாளா் இல்லாத நிலையில், அவருடைய கணக்கில் உள்ள பணம் அல்லது வங்கி முதலீடுகளை நியமனதாரா் உரிமை கோர முடியும்.

Bu hikaye Dinamani Chennai dergisinin September 06, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin September 06, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024