முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு எட்டு முறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களிலும் வட்டி விகிதத்தை அதேநிலையில் தொடா்வது என்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதேநேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.
மும்பையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதாரம், நிதிசாா் முன்னேற்றங்களைக் கருத்தில்கொண்டு 6.5 சதவீத வட்டி விகிதத்தை மாற்றமின்றி தொடா்வது என்று நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் பெரும்பான்மையாக முடிவெடுக்கப்பட்டது. 6 போ் கொண்ட குழுவில் வட்டி விகித குறைப்புக்கு ஆதரவாக இருவா் வாக்களித்தனா்.
பொருளாதார வளா்ச்சி 7.2%: கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வேகமெடுத்த பொருளாதார வளா்ச்சியால் (7.8 சதவீதம்) இது சாத்தியமானது.
Bu hikaye Dinamani Chennai dergisinin June 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin June 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கடலோரப் பகுதிகளை சூறையாடிய ‘ஃபென்ஜால்’
சென்னை கடலோரப் பகுதிகளை ஃபென்ஜால் புயல் சூறையாடியது. இதனால், அதிக அளவில் சேதம் ஏற்பட்டது.
மகாராஷ்டிர புதிய அரசு டிச. 5-இல் பதவியேற்பு
முதல்வராக ஃபட்னவீஸ் நாளை தேர்வு
சென்னையை உலுக்கிய ஃபென்சால் புயல்
மரக்காணம் அருகே கரையைக் கடந்தது
விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை, நவ. 29: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி-கடலூரில் 7, நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்
புதுச்சேரி/நெய்வேலி/நாகப்பட்டினம்/காரைக்கால், நவ.29: வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூர் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பிவைப்பு
சென்னை, நவ. 29: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்
புதுச்சேரி, நவ.29: வங்கக் கடலில் 'பென்ஜால்' புயல் உருவானதை யொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.
விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்
புது தில்லி, நவ. 29: பிஎம்டபிள்யு வின் இருசக்கர வாகனப்பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு
மும்பை, நவ.29: பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 759 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,100-ஐ கடந்த நிலையில் நிறைவடைந்தது.