அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டில், சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டு ஜூன் 15-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ரூ.240.54 கோடியில் கட்டடம் மற்றும் ரூ.146.52 கோடியில் அதிநவீன உபகரண வசதியுடன் 6 லட்சம் சதுர அடியில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் 1,000 படுக்கை வசதிகள் உடன் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனையில் ஓராண்டில் புறநோயாளிகள் 2 லட்சத்து 21,434, உள்நோயாளிகள் 63,505 சிகிச்சை பெற்றுள்ளனா். இதுவரை 2,179 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குளிா்சாதன வசதியுடன் கூடிய 70 கட்டண தனி அறைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த வாா்டுகளில் செவிலியா்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Bu hikaye Dinamani Chennai dergisinin June 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin June 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை, நவ. 29: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி-கடலூரில் 7, நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்
புதுச்சேரி/நெய்வேலி/நாகப்பட்டினம்/காரைக்கால், நவ.29: வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூர் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பிவைப்பு
சென்னை, நவ. 29: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்
புதுச்சேரி, நவ.29: வங்கக் கடலில் 'பென்ஜால்' புயல் உருவானதை யொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.
விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்
புது தில்லி, நவ. 29: பிஎம்டபிள்யு வின் இருசக்கர வாகனப்பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு
மும்பை, நவ.29: பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 759 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,100-ஐ கடந்த நிலையில் நிறைவடைந்தது.
கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேற்றம்
டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த ரஸ்டோல்னோயே பகுதி மீட்கப்பட்டது. டொனட்ஸ்க் மற்றும் ஸபோரிஷியா பிராந்தியங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலிகயா நோவோஸெல்கா நகருக்கு வெறும் ஏழு கி.மீ. தொலைவில் அந்தப் பகுதி அமைந்துள்ளது.
யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்
ஐஏஇஏ எச்சரிக்கை
காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்
ஜெருசலேம், நவ. 29: காஸா போர் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பார்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டர் தெரிவித்துள்ளார்.