மகாராஷ்டிர மாநிலம், மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியின் சிவசேனை வேட்பாளா் ரவீந்திர வைக்காா் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவரின் உறவினரான மங்கேஷ் பன்டில்கா் வாக்குப் பதிவு இயந்திரத்தை கைப்பேசி மூலம் ஹேக் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பான பத்திரிகை செய்தியை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில்,‘இந்திய ஜனநாயகம் போலியான பிம்பமாக மாற்றப்படுகிறது. அரசுசாா் நிறுவனங்களில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெறுகின்றன’ எனக் குறிப்பிட்டாா்.
‘சிக்கல்களைத் தீா்க்கவே தொழில்நுட்பம்; ஆனால், தொழில்நுட்பத்தால் புதிய சிக்கல்கள் ஏற்படும் என்றால் அது தேவையில்லை’ என வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவும் எக்ஸ் வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin June 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin June 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மழை பாதிப்பு: மக்களுக்கு உதவ அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கும் பணிகளில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைவு
சென்னையில் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, ஃபென்ஜால் புயல்- மழை பாதிப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஒப்பந்தப் பணிகளை செய்ததாக ரூ.15 கோடி மோசடி: ஒருவர் கைது
சென்னையில் தனியார் நிறுவனப் பணிகளைச் செய்வதாகக் கூறி ஒப்பந்தம் வாங்கி ரூ.15.50 கோடி மோசடி செய்த வழக்கில், ஒப்பந்ததாரரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச.6-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்க கட்டுப்பாடு
ஃபென் ஜால் புயல், தொடர் மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பள்ளிகளைத் திறப்பதற்கு உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம்: ஆளுநர் ரவி
இயற்கை பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருவள்ளூர்: நிவாரண முகாம்களில் 827 பேர் தங்கவைப்பு
திருவள்ளூர் மாவட்ட புயல் நிவாரண முகாம்களில் ஆவடி-62, ஊத்தங்கோட்டை-101, பூந்தமல்லி-11, திருவள்ளூர்-95, பொன்னேரி-367, கும்மிடிப்பூண்டி-102, திருத்தணி-75, ஆர்.கே.பேட்டை-14 என 232 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 827 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல்-மழை: 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள்
பென்ஜால் புயல் மற்றும் கனமழை தொடர்பாக 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன என்று தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஃபென்ஜால் புயல்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர்.
தண்ணீர் தேசமாக மாறிய புறநகர்
ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக புறநகர் பகுதியும், சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.