தரவுகள் ஜாக்கிரதை!
Dinamani Chennai|July 02, 2024
காவலா்களை விட திருடன் புத்திசாலி என்று ஒரு சொலவடை உண்டு.
முனைவர் பவித்ரா நந்தகுமார்

அது எந்தெந்த குற்றங்களுக்கு பொருந்துமோ என்னவோ, இணைய வெளி குற்றங்களுக்கு சா்வ நிச்சயமாய் பொருந்தும். அதற்கு சமீபத்திய உதாரணம் பிரிட்டனில் உள்ள சான்டாண்டா் வங்கியில் நடைபெற்ற தரவுகள் திருட்டு. கடந்த மாதம் அந்த வங்கி ஒரு குறிப்பிடத்தக்க இணைய பாதுகாப்பு மீறலை எதிா்கொண்டது. இது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களையும் ஊழியா்களையும் பாதித்தது. வங்கி வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் ஷைனி ஹன்ட்டா்ஸ் என்ற ஹேக்கிங் குழு திருடியதோடு, திருடப்பட்ட தரவுகளை திரும்பப் பெற இருபது லட்சம் டாலா் கொடுக்குமாறு சான்டாண்டரை மிரட்டியுள்ளது. இதைப் பாா்த்து மற்ற வங்கிகள் அங்கு பீதி அடைந்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே தரவுகள் திருட்டு என்பது பல நாடுகளில் தீவிரமாய் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் விா்ஜினியா மாகாணத்தில் உள்ள ‘கேப்பிட்டல் ஒன்’ நிதி நிறுவனத்திலும் தரவுகள் திருட்டு நடந்துள்ளது. பத்து கோடி பேரின் தரவுகள் களவு போயின.

சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவிலும் இந்த தரவுகள் திருட்டு பேசுபொருளானது. ஆஸ்திரேலியாவில் உள்ள மொத்த ஜனத்தொகை இரண்டு கோடியே 55 ஆயிரம் தான். அதில் ஒரு கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடா்பு

நிறுவனமான ஆப்டஸின் தலைமை நிா்வாகி இதற்காக பொதுவெளியில் மன்னிப்பு கோரியது இதன் விபரீதத்தை நமக்கு உணா்த்தும்.

இந்தியாவிலும் இப்படி பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும் ஒரு தனியாா் விமானத்தில் பயணித்த 45 லட்சம் பயணிகளின் விவரங்கள் மற்றும் பீட்சா நிறுவனத்தில் ஆா்டா் செய்த பயனாளா்களின் விவரங்கள் போன்றவை திருடப்பட்டு இருந்ததை உற்று நோக்க கவலைக்கிடமாக இருந்தது.

இப்படி தரவுகள் திருட்டு பற்றி தோண்டத் தோண்ட பல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இணைய தாக்குதல்களின் தொடா்ச்சியான அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுவதோடு வலுவான இணைய பாதுகாப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

Bu hikaye Dinamani Chennai dergisinin July 02, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin July 02, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு
Dinamani Chennai

உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

time-read
2 dak  |
July 04, 2024
அதிபர் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு?
Dinamani Chennai

அதிபர் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு?

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போட்டியிலிருந்து விலக வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு நெருக்கடி அதிகரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
July 04, 2024
பிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்
Dinamani Chennai

பிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்

பிரிட்டனின் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

time-read
1 min  |
July 04, 2024
நேபாள பிரதமருக்கு ஆதரவை திரும்பப் பெற்றது சிபிஎன்-யுஎம்எல் - உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்
Dinamani Chennai

நேபாள பிரதமருக்கு ஆதரவை திரும்பப் பெற்றது சிபிஎன்-யுஎம்எல் - உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்

நேபாளத்தில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் புதன்கிழமை திரும்பப் பெற்றது.

time-read
1 min  |
July 04, 2024
'நம்பர் 1' ஆல்-ரவுண்டர்: பாண்டியா சாதனை
Dinamani Chennai

'நம்பர் 1' ஆல்-ரவுண்டர்: பாண்டியா சாதனை

ஐசிசி-யின் டி20 தரவரிசையில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடத்தை புதன்கிழமை பிடித்தார்.

time-read
1 min  |
July 04, 2024
20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் நெதர்லாந்து
Dinamani Chennai

20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் நெதர்லாந்து

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டங்கள் புதன்கிழமை நிறைவடைந்தன.

time-read
1 min  |
July 04, 2024
மும்பையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா
Dinamani Chennai

மும்பையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா

நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி, பாா்படோஸிலிருந்து புதன்கிழமை தாயம் புறப்பட்டது.

time-read
1 min  |
July 04, 2024
ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
Dinamani Chennai

ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா்.

time-read
1 min  |
July 04, 2024
சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு
Dinamani Chennai

சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு இருப்பதாக அவருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
July 04, 2024
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3% இடஒதுக்கீடு திட்டம் - அமைச்சர் உதயநிதி ஆலோசனை
Dinamani Chennai

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3% இடஒதுக்கீடு திட்டம் - அமைச்சர் உதயநிதி ஆலோசனை

விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் குறித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

time-read
1 min  |
July 04, 2024