33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் பலவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச களத்தில் தங்கள் தேசத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களைச் குவித்து வருகின்றனர். துப்பாக்கி சுடுதல் மூலம் மானு பாக்கர் தனியாகவும், சரப்ஜோத் சிங் உடன் இணைந்தும் வென்ற 2 வெண்கலப் பதக்கங்களால் இந்தியாவும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது.
தற்போது அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முனைப்புடன் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் முன்னேறி வருகின்றனர். அதன் விவரங்கள்:
துப்பாக்கி சுடுதல்
இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசேல்
ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல் இறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை தகுதிபெற்றுள்ளார். இதன் மூலம், துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3-ஆவது பதக்கம் குத்துக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தகுதிச்சுற்றின்போது ஸ்வப்னில் குசேல் மொத்தமாக 590 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை உறுதி செய்தார். அதில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ஐஸ்வரி பிரதாப் தோமர் 589 புள்ளிகளுடன் 11-ஆம் இடம் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினார். இந்தப் பிரிவில் முதல் 8 இடங்களில் வரும் ஒருவருக்கே இறுதிச்சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
முன்னதாக தகுதிச்சுற்றின் போது ஸ்வப்னில், நீலிங் பொசிஷனில் 198 (99+99), புரோன் பொசிஷனில் 197 (98+97), ஸ்டாண்டிங் பொசிஷனில் 195 (98+97) புள்ளிகள் பெற்றார். ஐஸ்வரி பிரதாப் அதே பிரிவுகளில் 197 (98+99), 199 (100+99), 193 (95+98) ஆகிய புள்ளிகள் பெற்றார். இந்தப் பிரிவுக்கான இறுதிச்சுற்று வியாழக்கிழமை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு ஹாங்ஸு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதிலேயே அணிகள் பிரிவில் ஸ்வப்னில், ஐஸ்வரி பிரதாப், அகில் ஷோரன் ஆகியோர் அடங்கிய அணி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மகளிர் டிராப்: மகளிருக்கான டிராப் துப்பாக்கி சுடுதலில் ராஜேஷ்வரி குமாரி, ஷ்ரேயசி சிங் ஆகியோர் தலா 113 புள்ளிகள் கொண்டு முறையே 22 மற்றும் 23-ஆம் இடங்களைப் பிடித்து, தகுதிச்சுற்றுடன் விடைபெற்றனர்.
குத்துச்சண்டை
Bu hikaye Dinamani Chennai dergisinin August 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin August 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்
கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
அரசு செயல்திறன் துறை தலைமை
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.