நாட்டைவிட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா
Dinamani Chennai|August 06, 2024
வங்கதேச வன்முறையால் பிரதமர் பதவி ராஜிநாமா
நாட்டைவிட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் மாணவா்களின் தீவிர போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடா்ந்து, பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். நாட்டைவிட்டு வெளியேறிய அவா், பிரிட்டன் தலைநகா் லண்டனில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலும் மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், காவல் துறைக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பயங்கர வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து வன்முறை குறைந்தது. எனினும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில், மாணவா்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டக்காரா்களைப் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை நிராகரித்த போராட்டக்காரா்கள், ஹசீனா தலைமையிலான அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா்.

மேலும், வங்கதேச மக்கள் அரசுக்கு எந்தவிதமான வரி, மின்சாரம், குடிநீா், சமையல் எரிவாயு கட்டணங்களைச் செலுத்த வேண்டாம், கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும், அரசுப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை உள்ளடக்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்த இயக்கம் காலவரையற்ற ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்தது. இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அந்த இயக்கம் கேட்டுக்கொண்டது.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 06, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 06, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

டிச.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு) காரணமாக தமிழகத்தில் டிச.30 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

கிறிஸ்துமஸ்: ஆளுநர்கள், முதல்வர் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 25, 2024
தடைகளை உடைத்து மனங்களில் நிறைந்தவர் பெரியார் ஈவெரா
Dinamani Chennai

தடைகளை உடைத்து மனங்களில் நிறைந்தவர் பெரியார் ஈவெரா

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

time-read
1 min  |
December 25, 2024
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளிவிழா விழிப்புணர்வு பேருந்துகள்
Dinamani Chennai

கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளிவிழா விழிப்புணர்வு பேருந்துகள்

துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
December 25, 2024
காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Dinamani Chennai

காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தது.

time-read
1 min  |
December 25, 2024
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணை
Dinamani Chennai

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணை

அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 500 கோடி டாலர் (சுமார் ரூ.43,000 கோடி) முறைகேடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

38 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ!

கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 37.6 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருந்தாலும், சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

time-read
1 min  |
December 25, 2024
பிஆர்எஸ்ஐ மாநாடு: 9 விருதுகளைப் பெற்ற தமிழகம்
Dinamani Chennai

பிஆர்எஸ்ஐ மாநாடு: 9 விருதுகளைப் பெற்ற தமிழகம்

பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் தேசிய மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

time-read
1 min  |
December 25, 2024
சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்
Dinamani Chennai

சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பார்க்கர் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்க விருக்கிறது.

time-read
1 min  |
December 25, 2024