வயநாடு மறுவாழ்வுப் பணிகளுக்கு உதவி : நிலச்சரிவு பகுதிகள் ஆய்வுக்குப் பின் பிரதமர் உறுதி
Dinamani Chennai|August 11, 2024
வயநாட் டில் நிவாரண, மறுவாழ்வு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசுக்கு மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
வயநாடு மறுவாழ்வுப் பணிகளுக்கு உதவி : நிலச்சரிவு பகுதிகள் ஆய்வுக்குப் பின் பிரதமர் உறுதி

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆக.10) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரழிவை எதிர்கொண்ட சூரல்மலையில் நடந்து சென்று பார்வையிட்ட அவர், நிலச்சரிவில் உயிர் தப்பியவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, புஞ்சிரிமட்டம் போன்ற மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த நிலச்சரிவு, கேரளத்தில் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பிரதமர் ஆய்வு: இந்நிலையில், வயநாட்டுக்கு சனிக்கிழமை வந்த பிரதமர் மோடி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். இதையொட்டி, கண்ணூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்ற பிரதமர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான் வழியாக பார்வையிட்டார். கேரள ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர் ஆகியோரும் அவருடன் சென்றனர்.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 11, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin August 11, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
Dinamani Chennai

எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
கொசுவைக் கொன்றால் சன்மானம்!
Dinamani Chennai

கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகர்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிர்வாகம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
மும்மொழி திணிப்பு கூடாது
Dinamani Chennai

மும்மொழி திணிப்பு கூடாது

மும்மொழி திணிப்பு கூடாது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

time-read
1 min  |
February 20, 2025
2 குழந்தைகள் வெட்டிக் கொலை; மனைவி, மற்றொரு குழந்தைக்கும் வெட்டு
Dinamani Chennai

2 குழந்தைகள் வெட்டிக் கொலை; மனைவி, மற்றொரு குழந்தைக்கும் வெட்டு

குடும்பத் தகராறில் தந்தை வெறிச் செயல்

time-read
1 min  |
February 20, 2025
பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்
Dinamani Chennai

பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கேரளத்துக்கு எதிராக குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

time-read
1 min  |
February 20, 2025
ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி
Dinamani Chennai

ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் ஜெஸ் ஸிகா பெகுலா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

time-read
1 min  |
February 20, 2025
திரிவேணி சங்கம கங்கை நீர் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை
Dinamani Chennai

திரிவேணி சங்கம கங்கை நீர் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்

உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சர்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்: சென்னை நகர அஞ்சல் மண்டலம் சாதனை

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் நிகழாண்டு ஜனவரி மாதம் வரை, சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய சேமிப்புக் கணக்குகளை தொடங்கியுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு நிதியுதவி ஏன்?
Dinamani Chennai

அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு நிதியுதவி ஏன்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

time-read
1 min  |
February 20, 2025