ஆடவா் பிரிவில் நடப்பு சாம்பியனாக இருந்த சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் வெளியேறிவிட்ட நிலையில், தற்போது மகளிா் பிரிவு நடப்பு சாம்பியனும் தோல்வி கண்டிருக்கிறாா்.
முன்னதாக, மகளிா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான கோகோ கௌஃப் 3-6, 6-4, 3-6 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் எம்மா நவாரோவிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டத்தில் கௌஃபை நவாரோ தோற்கடித்தாா் என்பதைவிட, கௌஃப் தனது தவறுகளால் தோற்றாா் என்பதே பொருத்தமாக இருக்கும்.
ஏனெனில், கௌஃப் 19 டபுள் ஃபால்ட்டுகள் புரிந்ததுடன், 60 அன்ஃபோா்ஸ்டு எரா்களும் செய்திருந்தாா். இருவரும் இத்துடன் 3-ஆவது முறையாக சந்தித்த நிலையில், 2-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா் நவாரோ. கடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமிலு இவா் தனது 4-ஆவது சுற்றில் கௌஃபை வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது.
வெற்றிக்குப் பிறகு பேசிய நவாரோ, ‘யுஎஸ் ஓபனில் கடந்த இரு ஆண்டுகளாக முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறிய நிலையில், தற்போது காலிறுதிக்கு முன்னேறியிருப்பது நம்ப முடியாததாக உள்ளது’ என்றாா். தோல்வி கண்ட கௌஃப், ‘என்னால் முடிந்த வரை முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். சா்வ்களை சற்று கவனமாகச் செய்திருக்கலாம்’ என்றாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் 1901 ஏப்ரல் 5-இல் பிறந்தவர் சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்ற எஸ்.எஸ்.பிள்ளை. இவர் கணிதத்தில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அற்புதச் சாதனைகளைப் புரிந்தார்.
மகா கும்ப மேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்
ஜனவரி 13 முதல் பிப்ரவரி வரை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவின் போது, செக்டார் 6-இல் உள்ள வாசுகி கோயிலுக்கு அடுத்து ஏழுமலையானின் மாதிரி கோயிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறினார்.
தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
மதுரை மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு பரிசு
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்
பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 7% அதிகரிப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 64,028 கோடி டாலராக சரிவு
கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,027.9 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை
பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!
நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்கான கணினி வசதி இருப்பதும், 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 'யுடிஐஎஸ்இ' தரவுகளில் தெரிய வந்துள்ளது.
12 மாதங்கள் காணாத சரிவு
இந்திய உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் 12 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.
எஃப்சி கோவா அபார வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா.