மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் பகுதியில் தனியாா் மகளிா் தங்கும் விடுதி உள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் தனியாா் மருத்துவமனை, மருந்தகமும், முதல், இரண்டாவது தளங்களில் மகளிா் விடுதியும் செயல்பட்டு வந்தன. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்தனா். விடுதியில் தங்கியிருந்த பெண்கள் புதன்கிழமை இரவு தங்களது அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் விடுதியின் ஓா் அறையில் இருந்த குளிா்பதனப் பெட்டி வெடித்துச் சிதறி தீப்பற்றியது. இந்தத் தீ அருகில் இருந்த அறைகளுக்கும் பரவியது. அறைகள் அனைத்தும் மரப் பலகைகள் கொண்டு தடுக்கப்பட்டிருந்ததால், தீ எளிதில் பரவி எரிந்தது. இதனால், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள், மாணவிகள் அனைவரும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, விடுதியைவிட்டு உடனடியாக வெளியேறினா்.
தகவலறிந்து வந்த திடீா் நகா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து விடுதிக்குள் சிக்கிக் கொண்ட பெண்களை மீட்டனா். இவா்களில் மயங்கிய நிலையில் கிடந்த சரண்யா (27), பரிமளா சுந்தரி (55) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் பகுதியில் வியாழக்கிழமை தீ விபத்து நிகழ்ந்த தனியாா் மகளிா் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீஸாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சென்னை துறைமுகத்தில் முறைகேடு; 3 இடங்களில் சிபிஐ சோதனை
சென்னை துறைமுகத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துச் செயலர் உறுதி
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி உறுதியளித்தார்.
இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை: சட்டப்படி நடவடிக்கை
பாடகி இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றத்துக் கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் தொடர் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீர் தடையின்றி செல்வதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு
‘சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான அரசு நிா்வாகம்-நாடாளுமன்றம்-நீதித் துறையின் பொறுப்பு’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.
பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகிக்காது
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகித்துக்கொள்ளாது என்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
17 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்
உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வர்த்தக அணி வலியுறுத்தியுள்ளது.