கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை
Dinamani Chennai|October 14, 2024
கோவையில் ஞாயிற்றுக்கிழமை கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரில் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை

சிவானந்தா காலனியில் ரயில்வே பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீரில் சிக்கிய தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் மீட்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, கோவையில் கவுண்டம்பாளையம், காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், வேலாண்டிபாளையம், வடவள்ளி, ஆனைகட்டி, வடகோவை, மருதமலை, பீளமேடு, ஒண்டிப்புதூர், மசக்காளிபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை மாநகரப் பகுதிகளில் மிதமான மழை காணப்பட்டது. பிற்பகலில் தொடர்ந்து கனமழை பெய்தது. மாலை வரை நீடித்த மழையால் அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் குளம்போல தேங்கியது. அதேபோல, அவிநாசி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ரயில் பாதையில் தண்ணீர் சூழ்ந்தது. அரசு மருத்துவமனை அருகே லங்கா கார்னர், கோவை ரயில் நிலையம் சாலை, குனியமுத்தூர், கரும்புக்கடை, ஆத்துப்பாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், அவ்வழியாக வாகனங்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 14, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 14, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை, நவ. 29: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

மழைக்காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

புதுச்சேரி-கடலூரில் 7, நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்

புதுச்சேரி/நெய்வேலி/நாகப்பட்டினம்/காரைக்கால், நவ.29: வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூர் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பிவைப்பு

சென்னை, நவ. 29: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 30, 2024
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்
Dinamani Chennai

புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்

புதுச்சேரி, நவ.29: வங்கக் கடலில் 'பென்ஜால்' புயல் உருவானதை யொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.

time-read
1 min  |
November 30, 2024
விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்
Dinamani Chennai

விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்

புது தில்லி, நவ. 29: பிஎம்டபிள்யு வின் இருசக்கர வாகனப்பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு
Dinamani Chennai

சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு

மும்பை, நவ.29: பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 759 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,100-ஐ கடந்த நிலையில் நிறைவடைந்தது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேற்றம்

டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த ரஸ்டோல்னோயே பகுதி மீட்கப்பட்டது. டொனட்ஸ்க் மற்றும் ஸபோரிஷியா பிராந்தியங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலிகயா நோவோஸெல்கா நகருக்கு வெறும் ஏழு கி.மீ. தொலைவில் அந்தப் பகுதி அமைந்துள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinamani Chennai

யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்

ஐஏஇஏ எச்சரிக்கை

time-read
1 min  |
November 30, 2024
காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்
Dinamani Chennai

காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்

ஜெருசலேம், நவ. 29: காஸா போர் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பார்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 30, 2024