தமிழகப் பொது வாழ்விற்கு ஒரு மக்கள் தலைமை தேவைப்படுகிறது. மக்கள் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு அந்த இடத்தை இன்னும் அதிகமான வாக்கு எண்ணிக்கையோடு நிரப்பினார் செல்வி ஜெயலலிதா. அதே நேரத்தில் தொடர்ந்து தனது இருப்பிடத்தைத் தக்க வைத்துக் கொண்டே வந்தார் கருணாநிதி.
அண்மைக்காலத்தில் இந்த மூன்று பெரும் தலைவர்களுக்குப் பிறகு மகத்தான மக்கள் சக்தியாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதற்குமான தலைவர்கள் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அதிகாரிகள் வரலாம்; நிர்வாகிகள் வரலாம்; அரசியல் ஆரூடம் சொல்லும் அறிஞர் பெருமக்கள் வரலாம்; ஆனால் 'கடைக்கோடி மனிதனுக்கும் கடைத்தேற்றம் தருவான்' என்று நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு தலைவன் வருவது மிக மிக முக்கியமானது. ஜனநாயகம் அதையே விரும்புகிறது.
எல்லாத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மாமனிதனாக ஒருவன் வளர வேண்டும் என்றால் அவனுக்குள் ஒரு மகத்தான சக்தி இருக்க வேண்டும். அந்தச் சக்தி என்ன என்பதை உணர்ந்து கொள்கிறவர்களே தன்னை அதற்கேற்பச் செப்பம் செய்து கொள்ள முடியும். அந்த நிலை இன்றைக்குத் தமிழகத்தில் இல்லை என்பதை நாம் நெஞ்சுரத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மக்களுக்காக... மக்களால்... மக்களோடு...! என்று மக்களாட்சியை வரையறுப்பார் அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன். மக்களிடம் செல்வம் முக்கியமில்லை. உங்களுக்கு எதிரே இருப்பது இரண்டு பெரிய திராவிட இயக்கங்கள் என்பதை நீங்கள் நினைவில் பதிக்க வேண்டும். அவர்கள் முக்கால் நூற்றாண்டைக் கண்டுவிட்ட முழு நேர அரசியல்வாதிகள். கிராமம் கிராமமாக ஊடுருவிக் கிடக்கிற பெரும்படை. தத்துவார்த்த தெளிவு - ஆழமான வாசிப்பு - அயராத உழைப்பு - சமரசமற்ற போர்க்குணம் இவற்றோடு நீங்கள் உங்கள் அரசியல் பகைவர்களைச் சந்தித்தாக வேண்டும்.
நாங்கள்தான் ஊரை வாழ வைக்க வந்த உண்மைத் தியாகிகள்...! என்று அவர்கள் மக்களிடம் தங்களைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பை நீங்கள் ஊடறுத்துப் பாய வேண்டும். நாங்களும் மக்கள் தொண்டாற்ற வந்த மகத்தான மனிதர்களே.! என்று நீங்கள் உங்களை மெய்ப்பித்தாக வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் ஒரு முறை சொன்னார் - என்னை எல்லோரும் 'படிக்காதவன்; பள்ளிக்கூடம் போகாதவன்' என்று பேசுகிறார்கள். எனக்கு எந்த ஆறு
Bu hikaye Dinamani Chennai dergisinin November 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin November 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்
2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை (நவ. 14) நடைபெறுகிறது.
திருக்கோயில்களில் ரூ.190 கோடியில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
குழந்தைகளுக்குத் தேவை அன்பும் அறிவியலும்!
இந்திய விண்வெளி வரலாற்றில் 2008 நவம்பர் 14 அன்று நிலவின் தென் துருவத்தில் இந்திய தேசியக்கொடி பதிக்கப்பட்டது.
தேவை அரசுக்கு மனமாற்றம்
அடிக்கடி நாம் காணும் காட்சி, வீதி யோரத்தில் சிலர் அலங்கோலமாக விழுந்து கிடப்பதாகும். பலர் எந்தவித பதைபதைப்புமின்றி, 'அவர் குடித்துவிட்டு கிடக்கிறார்' என்று கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
சபரிமலை செல்ல சிறப்பு ரயில்: ஹூப்ளி – கோட்டயம் இடையே இயக்கம்
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஹூப்ளியில் இருந்து கோட்டயத்துக்கு ஜன.14-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவமனையில் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை!
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக டார்ச்லைட் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
4 நாள்கள் பயணமாக தமிழகம் வருகிறது 16-ஆவது நிதி ஆணையம்
முதல்வருடன் ஆலோசனை - கீழடி செல்ல திட்டம்
மருத்துவருக்கு கத்திக்குத்து: ஆளுநர், தலைவர்கள் கண்டனம்
கிண்டி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடில்லா தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.