தமிழ்நாட்டுக்கு 4 நாள்கள் பயணமாக, 16-ஆவது நிதி ஆணையம் வரவுள்ளது. நவ.17 முதல் 20-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனைகளையும் களஆய்வுப் பணிகளையும் நிதி ஆணையம் மேற்கொள்கிறது.
முன்னதாக, நிதி ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்தியாவின் வரி வசூலிக்கும் கட்டமைப்பில், பெருமளவிலான வரியை மத்திய அரசு பெறுகிறது; ஆனால், அதிக அளவிலான செலவுப் பொறுப்புகளை மாநில அரசுகள் தான் செய்தாக வேண்டிய நிலை உள்ளது. மொத்த வரி வருவாயை எந்த அளவுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்வது என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
மேலும், மாநிலங்களுக்கென ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதியை ஒதுக்க வேண்டும் என்பதையும் கணக்கிட வேண்டும். இந்தப் பணிகளுக்காகவும், இதற்கான பரிந்துரைகளை வழங்கவும் நிதி ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து இருக்கிறது.
Bu hikaye Dinamani Chennai dergisinin November 14, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin November 14, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 14-ஆவது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை பதவியேற்றார்.
வக்ஃப் மசோதா: கூட்டுக் குழு பதவிக் காலம் நீட்டிப்பு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடலூருக்கு பேரிடர் மீட்பு படையினர் வருகை
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'பென்ஜால்' புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்துக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் கடலூருக்கு புதன்கிழமை வந்தனர்.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் 3-ஆவது நாளாக மழை
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தஞ்சாவூரில் 2,000 ஏக்கர் பயிர்கள் சேதம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 2,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
உதகையில் குடியரசுத் தலைவர் முர்மு
முப்படை பயிற்சி அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளர்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஹெச்) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர் ஜெய் பட்டாச்சார்யாவை நியமித்து அந்நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா்.
அதிபருக்கு கொலை மிரட்டல்; துணை அதிபர் மீது வழக்கு
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அந்த நாட்டுத் துணை அதிபர் சாரா டுடேர்த்தே (படம்) மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றது இம்ரான் கட்சி
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் நள்ளிரவு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக, அந்தப் போராட்டத்தை கட்சி தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.