அப்போதுதானே ஆயுதங்களை விற்பனை செய்ய முடியும்?
முதல் உலகப் போர் 1914-ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று ஹங்கேரி-ஆஸ்திரியா நாடுகள் செர்பியா மீது போர் அறிவித்த போது தொடங்கியது. இது உலக வரலாற்றில் மிகப்பெரிய போர்களில் ஒன்றாகும். இந்த மிருகத்தனமான போரில் 70 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் 90 லட்சம் படைவீரர்கள் உயிரிழந்தனர்.
இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை நேச நாடுகளுக்கும், அச்சு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். மனித வரலாற்றில் இதுவரை அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்திய போராக இரண்டாம் உலகப்போர் திகழ்கிறது. இனப்படுகொலை, பட்டினி, படுகொலைகள் மற்றும் நோய் காரணமாக கோடிக்கணக்கானோர் இறந்தனர்.
இரண்டாம் உலகப்போரானது, உலகின் அரசியல் சார்பு மற்றும் சமூக அமைப்பை மாற்றியது. பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கவும், எதிர்காலத்தில் போர்களைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்டது. அதன் பிறகு அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் ஒன்றியமும் எதிரெதிர் வல்லரசுகளாக வளர்ந்து விட்டன.
இப்போது இரண்டு போர்கள் உலகப் போரை நோக்கிப் போகின்றன. ரஷிய-உக்ரைன் போரில் முதன் முறையாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைன் மீது பயன்படுத்தியுள்ளது ரஷியா. இதை உக்ரைனின் முன்னாள் தளபதி, 'மூன்றாம் உலகப் போர் தொடங்கியது' என்று வர்ணித்துள்ளார். ஆயிரம் நாள்களைக் கடந்தும் முடிவடையாமல் போர் தொடர்கிறது.
இன்னும் சொன்னால் முன்பைவிடத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷிய அதிபர் புதின், கடந்த பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரைன் மீது போர் தொடுக்க தமது ராணுவத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டார். வான்வழித் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்கள் நடத்தியதையடுத்து உக்ரைன் எல்லைக்குள் ரஷிய ராணுவம் நுழைந்தது.
Bu hikaye Dinamani Chennai dergisinin December 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
போதை மூலப்பொருள் இறக்குமதி இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு
ஃபென்டானில் எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடர், அதோஸ் கெமிக் கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீது அந்நாடு வழக்குப் பதிவு செய்துள்ளது.
புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: வட கொரியா அறிவிப்பு
தாங்கள் திங்கள்கிழமை சோதித்த ஏவுகணை ஒலியைப் போல் ஐந்து மடங்குக்கும் அதிக வேகத்தில் பாயும் திறன் கொண்ட 'ஹைப்பர்சோனிக்' வகையைச் சேர்ந்த புதிய ஏவுகணை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
2 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் நேர்மறையாக முடிந்தது.
சர்வதேச மேற்பார்வையில் காஸா இடைக்கால அரசு - அமெரிக்கா, இஸ்ரேலுடன் சவூதி ஆலோசனை
காஸா போர் முடிவுக்கு வந்ததும் அந்தப் பகுதியில் பாலஸ்தீன அரசு அமையுமவரை அமெரிக்கா மற்றும் தங்கள் நாட்டின் மேற்பார்வையில் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் ஐக்கிய அரபு அமீரகம் ஆலோசனை நடத்திவருகிறது.
முறைகேடு வழக்கு தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்தி வைக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வியடைந்தது.
தென்மண்டல பல்கலை. ஹாக்கி பெங்களூரு சிட்டி சாம்பியன்; எஸ்ஆர்எம் இரண்டாம் இடம்
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர் ஹாக்கிப் போட்டியில் பெங்களூரு சிட்டி பல்கலை. சாம்பியன் பட்டம் வென்றது.
பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துபோட்டியில், நாட்டிங்கம் ஃபாரஸ்ட் அணி 3-0 கோல் கணக்கில் வோல்வர்ஹாம்டன் வான்டர்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
காலின்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஆஸ்டபென்கோ வெற்றி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
பிரதமர் மோடிக்கு மகள் சர்மிஷ்டா முகர்ஜி நன்றி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.