கிராமங்களில் ஒருகாலத்தில் எனக்குத் தெரிந்து பிள்ளைகள் கூடி ஓடி விளையாடத் தெருக்கள், மந்தைகள், மைதானங்கள் இருந்தன.
பருவகால விவசாயம் நடந்து கொண்டிருக்க, தை பொங்கல், தீபாவளி, ஊர்த் திருவிழாக்கள் என நிறைந்து நிலங்களும் மனிதர்களும் செழிப்பாக- வளமையாக இருந்த காலமும்கூட.
ஒரு வீடு என்று சராசரியாக எடுத்துக் கொண்டால் தவறாமல் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சில நேரம் அத்தைகள், சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், தம்பி, தங்கைகள், அக்காக்கள் என பல உறவுகள் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருப்பார்கள். வீட்டின் சமையல் அறையில் எல்லோருக்குமான உணவு எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
கால்நடைகளுக்கு புண்ணாக்கு, பருத்தி விதை ஆட்டி காலையில் அதற்கு அந்த தண்ணீரைக் காட்டுவது... கறவை மாடுகளுக்குத் தீவனம் அளிப்பது மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனம், உலர் தீவனம் அல்லது வைக்கோல் அளிப்பார்கள். தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும்.
எல்லோருக்கும் ஏதேனும் ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். மூதாட்டிகள்கூட தானியங்களை உலர்த்துவது, உலர்ந்ததானியங்களைப்புடைப்பது, அவற்றைத் திருகையில் விட்டுத் திரிப்பது, ஆடு, கோழிகளுக்கு தீனி இடுவது, குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் செய்வது என்று பல வேலைகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். உண்ணும் உணவிற்கு ஏதேனும் ஒரு வேலை செய்ய வேண்டும் என்கிற எதார்த்தம் நிறைந்த மனிதர்கள் அவர்கள்.
பத்து ஊருக்கு ஒரு சந்தை என்று பொருள்களை மலிவு விலையில் வாங்குவதற்கான கடை விரிப்புகள் ஊர்கள்தோறும் இருந்தன. மாட்டு வண்டி செல்லும் மண் தடங்கள் எல்லாம் இன்று தார்ச்சாலை ஆகிவிட்டபின் மனித வாழ்க்கை அதிகப்பொருள் செலவு மிகுந்ததாக ஆகிவிட்டது.
அக்காலத்தில் கிராமப்புறங்களில் இருந்த கை வைத்தியங்கள் முழுவதும் மறக்கடிக்கப்பட்டு விட்டன. வீட்டில் பெரியவர்கள் இருக்கும்போது, அதற்கான கை வைத்தியத்தை உடனே எளிதாகச் செய்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். நூற்றுக்கும் மேலான கை வைத்தியங்கள், பாட்டி வைத்தியங்கள் இருந்த காலம் போய்விட்டது. இன்று கல்வியும், மருத்துவமும் பெரும் வணிக நிறுவனங்களாக மாறி விட்ட பிறகு, அதற்கான பணத்தை ஈட்டும் வழியை அறிய முடியாமல் பலரும் தடுமாறுகிறார்கள்.
Bu hikaye Dinamani Chennai dergisinin December 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மாசாணியம்மன் கோயிலின் 28 கிலோ தங்கம் எஸ்பிஐவசம் ஒப்படைப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் காணிக்கையாக கிடைக்கப் பெற்ற 28 கிலோ 906 கிராம் தங்கத்தை எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு புதன்கிழமை ஒப்படைத்தார்.
நீட் தேர்வு: பாடத் திட்டம் வெளியீடு
இளநிலை நீட் தேர்வுக்கான பாடத் திட்ட விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் கேட்டுக்கொண்டார்.
சரிவைக் கண்ட சர்க்கரை உற்பத்தி
சில மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி தாமதமாகத் தொடங்கியதால் 2024-25-ஆம் சந்தைப் பருவத்தின் டிச. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 17 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் கடன் பட்டுவாடா 46% அதிகரிப்பு
இந்திய நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களின் கடன் பட்டுவாடா கடந்த அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜப்பான்: ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி
ஜப்பானின் தனியார் புத்தாக்க நிறுவனமான ஸ்பேஸ் ஒன், தனது ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை இரண்டாவது முறையாக விண்ணில் செலுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
சென்செக்ஸ் 3-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
காஸா: மேலும் 38 பேர் உயிரிழப்பு
காஸா குதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 பேர் யிரிழந்தனர்.
பாகிஸ்தான் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
ரஷிய தளபதி படுகொலை: உஸ்பெகிஸ்தான் இளைஞர் கைது
ஸ்கூட்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கியத் தளபதி இகார் கிறிலோவ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.