மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்யப்பட்டது.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவையில் அறிமுகம் செய்த இதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், சட்ட மேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அதனால், அவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Bu hikaye Dinamani Chennai dergisinin December 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சரித்திரம் பேசும் வெல்ஸ்!
பிரபல எழுத்தாளர்கள் லூசியன், ஸ்விப்ட், மேரி ஷெல்லி, புல்வர், லிட்டன் உள்ளிட்டோர் இதில் முன்னோடிகளாக விளங்கினாலும், 19– ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் 'சயின்ஸ் ஃபிக்ஷன்' முழு உருவைப் பெற்றது. இதில், 'ஜூலஸ் வெர்னாவின்' படைப்புகள் பிரபல மானவை. ஆனாலும், இத்துறையில் வெற்றிக் கொடி நாட்டியவர் 'ஹெச்.ஜி. வெல்ஸ்' என்னும் ஆங்கில எழுத்தாளர்தான்.
நகைச்சுவையன்றி வேறொன்றுமில்லை..!
கிரேஸி மோகன் தலைமையிலான 'கிரேஸி கிரியேஷன்ஸ்' நாடகக் குழு, 1979 ஆம் ஆண்டு முதல் 18 நாடகங்களை உலகம் முழுவதும் 6500 முறை மேடை ஏற்றி சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில், அக்குழுவின் சிறந்த ஆறு நாடகங்கள் 'மார்கழி காமெடி கலாட்டா' என்ற பெயரில் அரங்கேறவுள்ளன.
தந்துவிட்டேன் என்னை!
புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் என்றாலே, அவரது பத்து விரல்களின் நர்த்தனங்களும், ஒலி நயத்துடன் ஒத்திசைந்து அங்கும் இங்கும் ஆடும் அவரது நீண்ட தலைமுடியும் நினைவுக்கு வரும்.
நெகிழிப் பைகளில் சூடான உணவு விற்பனை: 11,025 கடைகளுக்கு ரூ.14.62 கோடி அபராதம்
சூடான உணவுப் பொருள்களை நெகிழிப் பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு, ரூ.14.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருநெல்வேலி எழுச்சிச் சின்னம்: முதல்வரிடம் வேங்கடாசலபதி வலியுறுத்தல்
திருநெல்வேலி எழுச்சிச் சின்னம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சாகித்திய அகாதெமி விருதாளர் எழுத்தாளரும் ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி வலியுறுத்தினார்.
இறை இலக்கியத்தைத் தவிர்த்து தமிழ் இசை பற்றி பேச முடியாது
இறை இலக்கியத்தைத் தவிர்த்துவிட்டு தமிழ் இசை பற்றி பேசவோ எழுதவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
8 நகரங்களில் ஏற்றம் கண்ட வீடுகள் விலை
இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விலை 11 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
காலாவதியான உணவுப் பொருள்கள் குறித்து காலாண்டு அறிக்கை: எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு
காலாவதியான மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள் குறித்த முழு விவரங்களை தங்களது வலைதளத்தில் ஒவ்வொரு காலாண்டும் கட்டாயமாகப் பதிவிட வேண்டும் என்று நிறுவனங்களுக்கு துறை ஒழுங்காற்று அமைப்பான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,287 கோடி டாலராகச் சரிவு
கடந்த 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 65,286.9 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
ரஷிய தொலைதூர நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
தலைநகர் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டின் தொலைதூரத்தில் அமைந்துள்ள நகரில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.