"நான் ஜார்ஜியாவைச் சேர்ந்தவன். வேர்க்கடலை வியாபாரம் செய்கிறேன். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்கிறார். அவர்தான் ஜேம்ஸ் எர்ல் கார்ட்டர் ஜூனியர். சுருக்கமாக ஜிம்மி கார்ட்டர். தனது 100-ஆவது வயதைக் கடந்து அக்டோபரில் பிறந்த நாளைக் கொண்டாடி விட்டு, ஞாயிற்றுக்கிழமை (டிச. 29, 2024) உலகிலிருந்து விடை பெற்றார்.
தேர்தல் பரப்புரையின்போது, "என் பெயர் ஜிம்மி கார்ட்டர். அதிபர் தேர்தலில் களத்தில் நிற்கிறேன்" என்றே பேசினார். வெற்றி பெற்று, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோதும், "நான், ஜிம்மி கார்ட்டர்" என்றே கூறினார். தன்னை எல்லோரும் ஜிம்மி என்று அழைக்கும் வகையிலேயே அதிகாரபூர்வமாக அழைக்க வழி செய்து கொண்டார்.
இதற்கு ஒரு காரணமும் உண்டு. ஜார்ஜியா மாகாணத் தேர்தலின்போதே அவரை "யார் இந்த ஜிம்மி" என குடியரசுக் கட்சியினர் கேலியாகக் குறிப்பிட்டார்களாம்.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஜான் பிட் ஸ்ஜெரால்ட் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ரிச்சர்டு நிக்சன், ஜெரால்டு ஃபோர்டு என குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களே அதிபர்களாகினர். கென்னடிக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் யாரும் வரவில்லையே என்ற பலரது ஏக்கத்தைக் களைவதற்காகவே வந்தவர் போல இருந்தார்.
எழுபதுகளின் தொடக்கத்தில் ஜார்ஜியா ஆளுநர் பதவியில் ஜிம்மி கார்ட்டர் இருந்தார். பதவி நிறைவின்போது, "நான் நாட்டின் அதிபர் ஆவேன்" என்றார். இரண்டே ஆண்டுகளில் அதை எண்ணியாங்கு எய்தினார். இத்தனைக்கும் ஜார்ஜியா ஆளுநராக தன் விருப்பத்தை வெளி யிட்டபோது, அமெரிக்க நாடு முழுவதும் அவரை அறிந்தோர் 5 சதவீதத்துக்கும் குறைவே.
அவருக்கு முன் அதிபர்களாக இருந்த குடியரசுக் கட்சியினர் மக்களுக்கே அலுப்பு ஏற்படச் செய்ததாக விமர்சனம் உண்டு. தேர்தல் களம் சூடுபிடித்த போது, வேர்க்கடலை வியாபாரி கார்ட்டர் 37 மாகாணங்களில் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நூற்றுக் கும் மேற்பட்ட கூட்டங்களில் லட்சக்க ணக்கான மக்களைச் சந்தித்தார். விளைவு, அவரது சிரிப்பு எல்லோருக்கும் பிடித்துப் போயிற்று.
ஞாயிற்றுக்கிழமையன்று கடைசி மூச்சுவிடும் வரைக்கும் ஏதாவது ஒரு பணி என்று இயங்கிக் கொண்டே இருந்தார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 02, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 02, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
லக்னௌ கோப்பை வெல்ல 200 சதவீதம் உழைப்பேன்
புதிய கேப்டன் ரிஷப் பந்த்
ஏகனாபுரம் கிராம மக்களுடன் விஜய் சந்திப்பு
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு
நடிகர் சைஃப் அலிகானை தாக்கிய நபரைக் காட்டிக்கொடுத்த 'தோள்பை'
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை அவர் உடைய வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை, மூன்று நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த தோள் பை அடையாளம் மற்றும் எண்ம பணப் பரிவர்த்தனை மூலம் போலீஸார் கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது.
திருமயம் அருகே சமூக ஆர்வலர் கொலை: 4 பேர் கைது
திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்து திங்கள்கிழமை திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்
மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் இண்டி கூட்டணி மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் விரைவில் தொடக்கம்
'தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் (சிஎம்எம்) விரைவில் தொடங்கப்படும்' என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திங்கள்கிழமை தெரிவித்தார்.
காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்; கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு தொடர்பான தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
அயல்நாடுகளில் தமிழ்க் கல்வி
புலம்பெயர்தல் மனித இயல்பு. வரலாற்றுக் காலத்தில் அல்லது சங்க காலத்தில் ரோம், கிரீஸ், எகிப்து, சீனா, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுடனான வணிகத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்கள், அகழ்வு ஆராய்ச்சிகள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.
சின்னர், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், உலகின் நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் யானிக் சின்னர், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனர்.
வடலூர் வள்ளலார் கோயில் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்காலத் தடை
உச்சநீதிமன்றம் உத்தரவு