தேவாலயக் கத்திக்குத்துச் சம்பவத்திற்கு சிங்கப்பூர் சமய அமைப்புகள் கண்டனம்
Tamil Murasu|November 11, 2024
அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் (படம்) பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்டதற்குச் சிங்கப்பூரில் உள்ள சமய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தேவாலயக் கத்திக்குத்துச் சம்பவத்திற்கு சிங்கப்பூர் சமய அமைப்புகள் கண்டனம்

வழிபாட்டு இடங்களில் வன்முறை சகித்துக்கொள்ளப்படாது என்று அவை எடுத்துரைத்தன.

சனிக்கிழமை (நவம்பர் 9) 57 வயதுப் பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ கத்திக்குத்துக்கு ஆளானார்.

சந்தேகத்தின் பேரில், சிங்கப்பூரரான 37 வயது சிங்கள ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 10 சமயங்களைப் பிரதிநிதிக்கும் சமயங்களுக்கு இடையிலான அமைப்பு (ஐஆர்ஓ) கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைப்பு, கிறிஸ்துவ, இந்து, இஸ்லாமிய, யூத, சீக்கிய, தாவோயிஸ்ட், ஸோரொவேஸ்திரிய, பௌத்த, பாஹாய் சமயங்களைப் பிரதிநிதிக்கிறது.

சம்பவம் தங்களுக்கு மிகுந்த வருத்தம் தருகிறது என்றும் நமது சமூகத்தில், குறிப்பாக அமைதி தரும் புனிதமான இடங்களில் வன்முறைக்கு இடம் கிடையாது என்றும் இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டன.

சிங்கப்பூரின் இஸ்லாமிய சமயத் தலைவரான டாக்டர் நஸிருத்தீன் முகம்மது நாசர், சிங்கப்பூரின் எல்லா வழிபாட்டு இடங்களின் புனிதத்தையும் பாதுகாப்பையும் காப்பதுடன் ஒவ்வொரு சமயமும் போதிக்கும் அமைதிக் கல்வியை வலியுறுத்துவதில் கத்தோலிக்க மற்றும் அனைத்து சமயத்தினருடனும் தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இந்தச் சவாலான நேரத்தில் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடன் தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதாக சீக்கிய ஆலோசனை மன்றம் சொன்னது.

Bu hikaye Tamil Murasu dergisinin November 11, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Murasu dergisinin November 11, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MURASU DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் இளையர்களுக்கு வேலை
Tamil Murasu

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் இளையர்களுக்கு வேலை

புதுடெல்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளையர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 24, 2024
திமுகதான் எனக்கு எதிரி; நடிகர் விஜய் அல்ல: சீமான்
Tamil Murasu

திமுகதான் எனக்கு எதிரி; நடிகர் விஜய் அல்ல: சீமான்

திமுகதான் எனக்கு எதிரி; நடிகர் விஜய் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 24, 2024
‘தேர்தல் விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்’
Tamil Murasu

‘தேர்தல் விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்’

தேர்தல் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 24, 2024
Tamil Murasu

புளூம்பெர்க் நிறுவனத்துக்கு பொஃப்மா திருத்த உத்தரவு

சிங்கப்பூர் உயர்தர பங்களாக்களுக்கான பரிவர்த்தனைகள் குறித்து டிசம்பர் 12ஆம் தேதி கட் டுரை ஒன்றை வெளியிட்டிருந்த புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு, பொய்யுரைக்கும் செய்தி சட்டத்தின் கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
சிரியா ஆட்சிமுறை மாற்றத்தால் மற்ற பகுதிகளிலும் விளைவுகள் ஏற்படும்
Tamil Murasu

சிரியா ஆட்சிமுறை மாற்றத்தால் மற்ற பகுதிகளிலும் விளைவுகள் ஏற்படும்

சிரியாவில் ஏற்பட்டுள்ள தலைகீழான ஆட்சி மாற்றம் உலகின் மற்ற பகுதிகளிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
Tamil Murasu

மேலும் இரு தனியார் வாடகை கார் சேவை நிறுவனங்கள்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் மேலும் இரண்டு புதிய தனியார் வாடகை கார் சேவை நிறுவனங்கள் சேவை வழங்க உள்ளன.

time-read
1 min  |
December 24, 2024
அன்வார் செயல்பாடுகளின் மதிப்பீடு 54% ஆக உயர்வு
Tamil Murasu

அன்வார் செயல்பாடுகளின் மதிப்பீடு 54% ஆக உயர்வு

பிரதமர் அன்வார் இப்ராகிமின் (படம்) செயல்பாடுகளுக்கான மதிப்பீடு ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்த 50 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில், தற்போது அது 54 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகத் தனது அண்மைய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று சுயேச்சை கருத்துக்கணிப்பு நிறுவனமான மெர்டேக்கா சென்டர் கூறியுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
மூலாதாரப் பணவீக்கம் நவம்பரில் 1.9% ஆக சரிவு
Tamil Murasu

மூலாதாரப் பணவீக்கம் நவம்பரில் 1.9% ஆக சரிவு

மூலாதாரப் பணவீக்கம் நவம்பரில் தொடர்ந்து சரிந்து, மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.

time-read
1 min  |
December 24, 2024
மூத்த நிர்வாகிகள் மூவரைப் பதவிநீக்கம் செய்த சிங்போஸ்ட்
Tamil Murasu

மூத்த நிர்வாகிகள் மூவரைப் பதவிநீக்கம் செய்த சிங்போஸ்ட்

சிங்போஸ்ட் நிறுவனம் அதன் மூன்று மூத்த நிர்வாகிகளைப் பதவிநீக்கம் செய்துள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
Tamil Murasu

ஜோகூர் மாநிலத்தில் வீட்டு விற்பனை அதிகரிப்பு

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வீட்டு விற்பனை இந்த வாண்டு மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
December 24, 2024