இந்த டிராம் போக்குவரத்து சேவை இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதேநேரம் டிராம் வண்டி சேவையும் நிறைவடைய போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
1873-ஆம் ஆண்டு பிப்.24-ல் டிராம் சேவை, அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் என அனைத்து தரப்பு மக்களுக்குமான போக்குவரத்து சேவையாக இது இருந்துள்ளது.
ஆரம்ப நாட்களில் டிராமை குதிரைகள் இழுத்துச் சென்றதாக தெரிகிறது. அப்படியே நீராவி மற்றும் மின்சாரத்தின் மூலம் டிராம் இயக்கம் பின்னாளில் உருமாறி உள்ளது.
1960-களில் 37 டிராம் வழித்தட சேவைகள் பயன்பாட்டில் இருந்துள்ளதாக தகவல். கால ஓட்டத்தில் படிப்படியாக அது குறைந்துள்ளது. நிதி நெருக்கடி, முறையாக பராமரிப்பு செய்யப்பாடாத ட்ராம்கள், குறைந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை, சாலை மேம்பாடு, கொல்கத்தா மெட்ரோ விரிவாக்கம், டிராமின் மிதமான வேகம் மற்றும் சாலையை அதிகளவு டிராம்கள் ஆக்கிரமித்து கொள்வது போன்ற காரணங்களால் இதன் சேவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
தற்போது நகரில் மூன்று வழித்தடங்களில் மட்டுமே டிராம் சேவை பயன்பாட்டில் உள்ளதாக தெரிகிறது.
அதன் சேவை நேரம் கூட முறையற்றதாக இருக்கிறதாம். கடந்த 2017-க்கு முன்னர் வரையில் நகரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் டிராம்கள் இயங்கி வந்துள்ளன. ஓட்டுநர் பற்றாக்குறை மற்றும் அரசின் மெத்தனப் போக்கும் இந்த சேவை பாதிக்கப்பட காரணமாக உள்ளன.
உலக அளவில் சூழல் மாசு அதிகரித்துள்ள நிலையில்... கொல்கத்தா நகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் டிராம் போக்குவரத்து சேவை, அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிகிறது.
Bu hikaye Kanmani dergisinin October 09, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin October 09, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.