டாட்டூஸ் போட முறையான பயிற்சி அவசியம்!
Thozhi|June 16, 2023
பச்சை குத்துதல், ஆதி காலத்திலிருந்தே கடைப்பிடிக்கும் ஒரு பழக்க வழக்கமாதான் நாம் கருதுகின்றோம். ஆனால் நம் மூதாதையர்கள் உடலில் எந்தப் பகுதியில் பச்சை குத்திக் கொண்டால் என்னென்ன பயன் என்று அறிந்துதான் பச்சை குத்திக்கொண்டார்கள்.
காயத்ரி காமராஜ்
டாட்டூஸ் போட முறையான பயிற்சி அவசியம்!
 
அதிலும் குறிப்பா நம்ம பாட்டி, அம்மா, அவர்களோட பாட்டி இவங்க எல்லாரும், அவர்களின் காதலை எடுத்துக்கூறும் வகையில் தங்களோட கணவன் பெயரையோ, கணவன்மார்கள் தங்களின் மனைவியின் பெயரையோ, இல்லை வேறு ஏதேனும் டிசைனையோ தங்களின் கைகளில் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் போட்டுக் கொண்டனர். ஆனால் பச்சை குத்தும் பழக்கம் நாளடைவில் மறந்து போனது. ஒரு சிலர் மட்டுமே தங்களின் மனைவி, கணவர்களின் பெயரை பச்சை குத்திக் கொண்டனர்.
 
இந்த பச்சை குத்துதல் தற்போது உள்ள காலத்திற்கு ஏற்ப மாறிவிட்டது. மாடர்ன் காலத்தில் இதனை டாட்டூ என்று குறிப்பிடுகிறார்கள். இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப தாயின் பெயரையோ, தங்களின் செல்லப் பிராணிகளின் உருவத்தையோ, அவர்களின் இஷ்ட தெய்வத்தையோ விரும்பும் வண்ணத்தில், விரும்பும் இடத்தில் சாயங்கள் உபயோகப்படுத்தி வரைந்து கொள்கின்றனர்.
 
இதனால் எந்த அளவிற்கு நன்மைகள் உண்டாகுமோ அதே அளவிற்கு தீமைகளும் ஏற்படும். இன்னும் தெளிவா சொல்லணும்னா, பச்சை குத்திக் கொள்வது குறித்த புரிதல் இன்றும் பெரும்பாலான மக்களிடம் இல்லை. அதைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் டாட்டூ ஆர்டிஸ்ட் ஷெர்லி.

‘‘நான் இந்த துறையில் ஐந்து வருஷமா செயல்பட்டு வருகிறேன். நான் பச்சை குத்துவதை என்னுடைய தொழிலாக மாற்றப் போகிறேன்னு சொன்ன போது, வீட்டில் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனலும் என்னோட ஆசைக்காக மூன்று மாதம் இதற்கான பயிற்சியினை முழுமையாக எடுத்தேன். இப்போது நான் ஒரு டாட்டூ ஆர்டிஸ்டாக  வேலை பார்த்து வருகிறேன். இயக்குனர் பாலாவின் படத்தில் டாட்டூ போடும் பார்லர் பெண்ணாக நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன்.

படத்தில் வரும் இந்த மாதிரியான கதாபாத்திரத்துக்கு பொதுவா எங்களோட குழுவில் உள்ளவர்கள் தான் நடிப்பாங்க. நடிகர் சூர்யா படத்தில் நடிக்கும் போது அவர் உடலில் போடப்படும் டாட்டூஸ் எல்லாமே நாங்க தான் செய்திருக்கோம்’’ என்ற ஷெர்லி, தான் இந்த துறையை தேர்ந்தெடுத்தது மற்றும் இதை கடந்து வந்த பாதைப் பற்றி விவரித்தார்.


Bu hikaye Thozhi dergisinin June 16, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Thozhi dergisinin June 16, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

THOZHI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
Thozhi

குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.

time-read
3 dak  |
16-31, Dec 2024
வரப்போகிறது புதிய வைரஸ்!
Thozhi

வரப்போகிறது புதிய வைரஸ்!

உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

time-read
1 min  |
16-31, Dec 2024
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
Thozhi

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.

time-read
2 dak  |
16-31, Dec 2024
குளிர் காலமும் வைட்டமின்களும்!
Thozhi

குளிர் காலமும் வைட்டமின்களும்!

எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.

time-read
1 min  |
16-31, Dec 2024
Sparkling Christmas....
Thozhi

Sparkling Christmas....

கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.

time-read
2 dak  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
Thozhi

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
Thozhi

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

time-read
2 dak  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கேக்!
Thozhi

கிறிஸ்துமஸ் கேக்!

கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
Thozhi

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

time-read
2 dak  |
16-31, Dec 2024
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
Thozhi

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

time-read
3 dak  |
16-31, Dec 2024