

Tamil Murasu - May 11, 2025

Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Murasu junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $14.99
1 año$149.99
$12/mes
Suscríbete solo a Tamil Murasu
1 año $69.99
comprar esta edición $1.99
Regalar Tamil Murasu
En este asunto
May 11, 2025
இந்தியா, பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது
கடந்த சில நாள்களாக இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலவி வந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இரு நாடுகளும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த சம்மதித்துள்ளன.

1 min
பாலியல் குற்றங்களுக்காக 460க்கும் அதிகமான இளையர்கள் கைது
பாலியல் தொடர்பான குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு 460க்கும் அதிகமான இளையர்களைக் கைதுசெய்துள்ளதாக சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் 19 அல்லது அதற்கும் குறைவான வயதில் உள்ளவர்கள்.
1 min
சமூகமாய் சேர்ந்தே தமிழ் வளர்ப்போம்
வாழும் மொழியாகத் தமிழ்மொழியை நிலைநிறுத்தச் சமூகம் ஒன்றுகூடி இழுக்கும் தேர் நேர்த்தியாய் நகர்ந்துகொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் தமிழ் சோறுபோடுமா, தமிழ் தேவையா, தமிழ் முக்கியமா போன்ற கேள்விகள் வெகுவாகக் குறைந்துவிட்டன.
1 min
உட்லண்ட்ஸ் விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்
உட்லண்ட்சில் மே 9ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் உயிரிழந்தார். இதன் தொடர்பில் 43 வயது ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
1 min
சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க இந்தோனீசியா திட்டம்
வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஓர் அங்கமாக, சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதிகளைக் குறைத்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து அதைத் தருவிக்க இந்தோனீசியா திட்டமிட்டுள்ளது.
1 min
மோசடியைத் தடுக்கக் காவல்துறைக்கு உதவிய பாதிக்கப்பட்ட இளையர்
மோசடிக் கும்பலுக்கு உதவியாகச் செயல்பட்ட 27 வயது நபரைக் காவல்துறையினர் பிடிக்க, மோசடியால் பாதிக்கப்பட்டவர் உதவினார்.
1 min
‘சிங்கப்பூர்’ எனும் ஒற்றைச் சொல் நம் ஒற்றுமையின் அடிநாதம்: டெனிஸ் புவா
‘சிங்கப்பூர்' எனும் ஒற்றைச் சொல் சிங்கப்பூரர்களை ஒன்றிணைக் கும் ஒற்றுமையின் அடிநாதம் என்றும், சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமையும் மரியாதையும் நாட்டின் தனித்துவமிக்க வலிமை என்றும் கூறியுள்ளார் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயருமான டெனிஸ் புவா.

1 min
டான் செங் போக்: அடுத்த தேர்தலில் நிற்கமாட்டேன்
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைத் தோற்றுவித்த டாக்டர் டான் செங் போக், அடுத்த பொதுத் தேர்தலில் கலந்துகொள்ளப்போவ தில்லை என்று சனிக்கிழமை (மே 10) கூறியுள்ளார். இருப்பினும், அவரது கட்சி அடுத்த சுற்றில் களமிறங்கும் என்றார் அவர்.

1 min
கொடூரமாகக் கொல்லப்பட்ட பூனை: சண்முகம் கண்டனம்
சமூகத்தினர் பராமரித்து வந்த பூனை ஒன்று, கொடூரமாகக் கொல்லப்பட்ட விவகாரத்தில் எந்த மாதிரியான நபர் இதனைச் செய்திருப்பார் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தனது கடுமையான கண்டனத் தைப் பதிவு செய்துள்ளார்.
1 min
ஐந்து பள்ளிகள் இருந்த இடங்கள் குடியிருப்புப் பகுதிகளாக மாறுகின்றன
ஐந்து பள்ளிகள் இருந்த இடங்கள், புதிய குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்காகத் தயாராகி வருகின்றன.
1 min
அரசாங்க உரையாடல் தளத்தை அதிகம் பயன்படுத்தும் பொதுத் துறை அதிகாரிகள்
ஆய்வுக்கும் எழுதுவதற்கும் பயன்படுத்தப்படும் 'பேர்' எனும் 'சாட்போட்' தளத்தை பொதுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.
1 min
தினேஷ் வாசு தாஸ்: மக்களைப் புரிந்துகொள்ளாதவன் அல்ல
மே 3 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் ஒருசில புதுமுகங்களில் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் தினேஷ் வாசு தாசும் ஒருவர்.

1 min
பெற்றோர் எனும் பேரின்பம் தரும் பிள்ளைச் செல்வம்
திருமணத்திற்கு முன்னர் திரு நிஜாமுதீன் இஷாக்கிடம், வளர்ப்புப் பெற்றோராக இருக்க உடன்படுவீர்களா என்று நஸ்ரின் ஷா பீவி கேட்டதும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.

1 min
அன்பு என்றால் அம்மா
மூன்று மகன்கள், ஒரு மகள், இரு பேரப்பிள்ளைகள், இரு கொள்ளுப் பேரப்பிள்ளைகள், உடல்நலம் குன்றிய கணவர் என எல்லாரையும் பல்லாண்டுகள் கவனித்துவந்துள்ளார் 95 வயது மேக்டலின் ரோட்ரிகஸ். அவருடைய கணவர் உடல்நலம் குன்றியதால் 2023ல் இறந்தார்.
1 min
இந்தியா-பாகிஸ்தான் பூசல்: ஆக்கபூர்வமான பங்களிப்பை விரும்பும் சீனா
இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதியை ஏற்படுத்த சீனா, ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தை சீனா மிக உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
1 min
பாகிஸ்தானுக்கான மருந்து ஏற்றுமதியை நிறுத்தியது தமிழகம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டன.
1 min
30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்: சசிதரூர்
காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாகப் பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், இன்னும் 30 ஆண்டுகள் முயன்றாலும் பாகிஸ்தானால் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

1 min
பொற்கோவிலுக்கு பாகிஸ்தான் குறி: இந்திய ராணுவம் சூளுரை
இந்தியாவின் மேற்கு எல்லைகளில் பாகிஸ்தான் ஆளில்லா வானூர்திகள் (டிரோன்கள்), ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவ தாக இந்திய ராணுவம் வெளி யிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அமிர்தசரஸ் பொற் கோவிலை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கு தகவல் கிடைத் தது, அப்பகுதிக்கு சிவப்பு எச் சரிக்கைக் குறியீடு விடுக்கப்பட் டது.
1 min
இரு நாள்களில் 228 விமானச் சேவைகள் ரத்தாயின
இந்தியா, பாகிஸ் தான் இடையே நீடித்து வரும் பதற்றம் காரணமாக, இரண்டு நாள்களில் மட்டும் 228 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்ட தாக இந்திய தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் ஐஎம்எஃப்: வாக்கெடுப்பைப் புறக்கணித்தது இந்தியா
போர்ச்சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் முடிவு செய்திருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது.
1 min
பாகிஸ்தானின் 400 வானூர்திகளை இடைமறித்து அழித்தது இந்தியா
இந்தியாவில் 36 இலக்குகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் செலுத்திய 400க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை (டிரோன்களை) இந்திய ராணுவம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

1 min
வடசென்னை எரிஉலை திட்டம் ஆபத்தானது: ஆய்வுக்குழு
வடசென்னையில் எரி உலை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத் நகரில் இயங்கும் எரிஉலையை நேரில் ஆய்வுசெய்த குழுவினரும் இந்தத் திட்டம் மக்களின் சுகா தாரத்துக்குக் கேடுவிளைவிக்கக் கூடியது, எனவே, உடனடியாக இந்தத் திட்டத்தை அரசு மீட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
1 min
ஹைதராபாத்தில் 72வது உலக அழகிப் போட்டி தொடக்கம்
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இவ்வாண்டின் 'மிஸ் வேர்ல்ட்' என அழைக்கப்படும் உலக அழகிப் போட்டி சனிக்கிழமையன்று (மே 10) தொடங்கி இம்மாதம் 31ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

1 min
தமிழக மருத்துவர்களின் சாதனை
அரிய ரத்த வகை உள்ள நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இத்தகைய கடினமான அறுவை சிகிச்சை நடைபெற்றிருப்பது உலக அளவில் இதுவே முதல்முறை என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

1 min
தமிழ்நாடு இனி சிங்கப் பாதையில் செல்லும்: ஸ்டாலின்
அடுத்து வரும் ஆண் டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி இருக்கும் என்றும் அரசு விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். திருச்சி மாவட்டம், பஞ்சப் பூரில் ரூ.408 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 min
அமெரிக்காவில் தட்டம்மைத் தொற்று
அமெரிக்காவில் தட்டம்மைத் தொற்றுச் சம்பவங் களின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளதாக சனிக்கிழமை (மே 9) வெளியிடப்பட்ட மாநில, உள்ளூர் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தட்டம்மைத் தொற்றால் அங்கு மூவர் மாண்டனர்.
1 min
மியன்மார் மறுநிர்மாணத்திற்குச் சீனா உதவி
சீன அதிபர் ஸி ஸின் பிங், அண்மை ஆண்டுகளில் மோசமான நிலநடுக்கத்தால் சிதைந்துபோன மியன்மாரின் மறுநிர்மாண முயற்சிகளுக்குக் கைகொடுக்க சனிக்கிழமை (மே 9) உறுதிகூறியுள்ளார்.
1 min
இந்தியா, பாகிஸ்தான் பூசலால் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம்: மலேசியா
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வலுத்துவரும் பூசலால் மலேசியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
1 min
போரை நிறுத்த உலக நாடுகள் வலியுறுத்தல்
பாகிஸ்தானும் இந்தியாவும் போரைக் கைவிடும் வழிகளை ஆராயும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிரிடம் சனிக்கிழமை (மே 9) கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min
ரஷ்யா - உக்ரேன் போரில் வடகொரிய பங்கேற்பு நியாயமானது: கிம் ஜோங் உன்
ரஷ்யா, உக்ரேன் இடையே நடந்துவரும் போரில் வடகொரிய ஈடுபாடு நியாயமானது என வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் சனிக்கிழமையன்று (மே 10) செய்தி வெளியிட்டது.
1 min
இளையோருக்கும் தமிழுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வழிமுறைகள்
தமிழில் படைப்புகளை உருவாக்குபவர்கள் எண்ணிக்கையும் தமிழைப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருப்பதனால், தமிழ்மொழி என்றும் வலுவாகவும் வளமாகவும் இருக்கும். ஆயினும், இந்த வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக்கொள்வது மிக மிக முக்கியம்.
1 min
பாலர் பள்ளி மாணவர்களின் தமிழார்வத்தைத் தூண்டும் முயற்சி
தமிழ் மொழி விழாவை முன்னிட்டு 3 முதல் 6 வயது வரையிலான பிள்ளை களுக்காகத் ‘துள்ளும் இளமை' எனும் நிகழ்ச்சி, ஏப்ரல் 26ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

1 min
குடும்ப உறுப்பினர்கள் மனந்திறந்து பேசுவதை ஊக்குவிக்கும் நாடகம்
எழுத்தாளர் ஹரிஷ் ஷர்மா எழுதிய 'ஸ்டேயிங் அலைவ்' என்ற ஆங்கில நாடகத்தைத் தமிழில் 'இல்' அதாவது இல்லம் என்ற பெயரில் மொழியாக்கம் செய்து, இயக்கி, மேடையேற்றியுள்ளார் சிங்கப்பூர் இந்திய நாடக, திரைப்பட ஆர்வலரான திரு சலீம் ஹாடி.

1 min
செல்சி, ஆர்சனல், நியூகாசல் இடையே கடும் போட்டி
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் பட்டியலின் முதல் ஐந்து இடங்களுக்குள் முடிப்பதற்கான போட்டி ‘தகிக்கிறது'. பட்டியலின் முதல் ஐந்து இடங்களில் முடிக்கும் குழுக்கள் அடுத்த பருவத்தின் யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறும்.
1 min
ஐபிஎல் 2025 விரைவில் மீண்டும் தொடங்கும்: கங்குலி
இந்தியா-பாகிஸ்-தான் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்து வருவதால் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
1 min
அரும்பொருளகத்தில் சிறாருக்கான புதிய தளம்: ‘கியூரியாசிட்டி கோவ்’
புதியனவற்றைக் கண்டறியும் தேடல் மனப்பான்மையுடைய சிறாருக்காக ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் புதிதாக அமையவிருக்கிறது 'கியூரியாசிட்டி கோவ்' (Curiosity Cove) என்ற இடம்.

1 min
இந்திய மரபுடைமை நிலையத்தில் கொண்டாட்டம்
புதுப்பிக்கப்பட்ட காட்சிக்கூடங்கள், அவற்றைச் சார்ந்த மரபுடைமை நிகழ்ச்சிகள், கலாசார நடவடிக்கைகள் முதலியவற்றுடன் இந்திய மரபுடைமை நிலையம் அதனுடைய பத்தாவது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்களைச் சனிக்கிழமை (மே 10) சிறப்பாகத் தொடங்கியது.
1 min
உயர்ந்த உள்ளம்
என் கணவனின் குடிவெறிக் கொடூரச் சீற்றம் தக்க காரணமின்றி அடி உதை கடுஞ்சொல் அகியவைகளில் அனுதினமும் எரி மலை வெடிப்பாய் இருந்தது. “இதற்கு மேல் அந்த ஆளோடு வாழ்வது அவ்வளவு எளிதான செயல் இல்லை,\" என்றது உறுதியுடன் ஒருநாள் என் உள்மனம்.
5 mins
கடவுள் பார்த்துக்கொள்வார்: யோகி பாபு
தாம் அதிக சம்பளம் வாங்குவதாகவும் பண விஷயத்தில் கறாராக இருப்பதாகவும் எழுந்துள்ள விமர்சனத்துக்கு யோகி பாபு (படம்) பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் 'கஜானா' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா, “இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபு இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஒருவேளை ஏழு லட்ச ரூபாய் கொடுத்திருந்தால் வந்திருப்பார்,\" என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.
1 min
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்: ராகவா லாரன்சை வாழ்த்திய ஏழைக் குடும்பம்
“நீங்கள் என்றைக்கும் நன்றாக இருக்க வேண்டும்,” என நடிகர் லாரன்சை மனதார வாழ்த்தியுள்ளது ஒர் ஏழைக் குடும்பம்.

1 min
உங்களால் உண்மையை மாற்றி எழுதவே முடியாது: ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்வது தெரியும். இருவரையும் எப்படியாவது சமாதானப்படுத்தி, மீண்டும் சேர்த்து வைத்துவிடலாம் என்பதே இருவரது நட்பு வட்டத்தில் உள்ளவர்களின் பெரும் நம்பிக்கையாக இருந்தது.

1 min
நடிகைகளின் உதவும் மனப்பான்மை
நடிகர்கள்தான் ஏழைகளுக்கு உதவி செய்வார்கள், நடிகைகள் செய்ய மாட்டார்கள் எனும் மாயத்தோற்றம் திரையுலகிலும் வெளியுலகிலும் நிலவி வந்தது.

1 min
Tamil Murasu Newspaper Description:
Editor: SPH Media Limited
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
Cancela en cualquier momento [ Mis compromisos ]
Solo digital