CATEGORIES
فئات
விஜய்யின் தைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது: மடோனா
‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தில் நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன், விஜய்யின் அரசியல் பிரவேசம் எனக்குப் பிடித்திருக்கிறது. தைரியமான மனிதர் என்று பாராட்டி இருக்கிறார்.
‘ஏஐ’ உதவியுடன் இயங்கும் செவிப்புலன் கருவிகள்
வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினையாக அடிக்கடி கருதப்படும் செவிப்புலன் இழப்பு, தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்சினையாக மாறிவிட்டது.
தற்காப்பு, கனிம வளம்: ஒத்துழைக்க தென்கொரியா, மலேசியா இணக்கம்
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தென்கொரியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உலகளவில் உறவினர், காதலரால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தினமும் சராசரியாக 140 பேர் உயிரிழப்பு
சென்ற ஆண்டு, தினமும் சராசரியாக 140 பெண்களும் சிறுமியரும் காதலர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) இரு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சம்பல் வன்முறையில் ஐவர் பலி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திடீர் என்று மூண்ட கலவரத்தில் ஐவர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் தொடர்பான மறுவாழ்வுச் சேவைகளை வழங்கும் ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
40 விழுக்காட்டு குழந்தைகளுக்கு டெங்கி பாதிப்பு பருவநிலை மாற்றத்தால் தொற்றுநோய் பரவல் தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், எந்த இடத்திலும் சீரான மழைப்பொழிவு இல்லை. மாறாக, பகலில் அதிக வெப்பமும் மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிரும் நிலவுவதோடு அவ்வப்போது மழையும் பெய்கிறது.
தனியார் மறுவிற்பனை வீட்டின் விலை குறைந்தது
சிங்கப்பூரில் தனியார் அடுக்குமாடி வீட்டு விலைகள் பத்து மாதங்களில் முதல் முறையாக இவ்வாண்டு அக்டோபரில் குறைந்தது.
பாசிர் பாஞ்சாங்கில் பாரந்தூக்கி மீது கொள்கலன் விழுந்தது
பாசிர் பாஞ்சாங் மூன்றாம் முனையத்தில் நவம்பர் 25ஆம் தேதி காலை, பாரந்தூக்கி மீது கொள்கலன் விழுந்ததை அடுத்து ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விமானத்தில் பெண்களை மானபங்கம் செய்ததாக முதியவர் மீது சந்தேகம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மூத்தவர் ஒருவர், பெண்கள் நால்வரை மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
செங்காங் - பொங்கோல் எல்ஆர்டி: 2 புதிய ரயில்கள் சிங்கப்பூர் வந்தடைந்தன
செங்காங் - பொங்கோல் இலகு ரயில் (எல்ஆர்டி) பாதைக்கான புதிய ரயில்களில் முதல் இரண்டு, நவம்பர் 23ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், சிங்கப்பூருடன் கரிம ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்பும் இந்தியா
தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் இதேபோன்ற பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
12 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீர் விநியோகம் சீரானது
கிளமெண்டி வட்டாரத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 70 வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்கும் 12 மணி நேரத்துக்குமேல் தடைபட்டிருந்த தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.
சிங்கப்பூரில் முகப்பரு தடுப்பூசிச் சோதனைகள்
பிரான்சைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சனோஃபி, முகப்பருக்கான தடுப்பூசி மருந்தைத் தயாரித்துள்ளது.
சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் குறைந்தது
சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் அக்டோபரில் 2.1 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. இது, ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.
அரசாங்க ஊழியர்களுக்கு 1.05 மாத ஆண்டிறுதி போனஸ்
அரசு ஊழியர்களுக்கு 1.05 மாத ஆண்டிறுதி போனஸ் வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு நவம்பர் 25ஆம் தேதி ஓர் அறிக்கையில் அறிவித்தது.
வோல்பாக்கியா திட்டம்: 2026க்குள் சிங்கப்பூரின் 50 விழுக்காட்டு வீடுகள் பலனடையும்
ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து டெங்கியால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வோல்பாக்கியா திட்டம் நீட்டிக்கப்படுகிறது.
சுசோ தொழிற்பூங்காத் திட்டம் குறித்து மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ‘முதிர்ச்சியடைந்த, வெற்றிகரமான எடுத்துக்காட்டு’
சுசோ தொழிற்பூங்காத் (SIP) திட்டம், சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான முதல் அரசுநிலைத் திட்டம் என்ற முறையில் அதன் குறிக்கோளை முழுமையாக நிறைவேற்றியுள்ளது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
காற்று தூய்மைக்கேட்டால் பொருளியல் பாதிப்பு
வட இந்தியாவில் நிலவும் நச்சுப் புகையும் தூசுமூட்டமும் குடிமக்களை மூச்சுத் திணறவைப்பதுடன், பலரின் உயிரைக் குடித்து பொருளியல் நிலைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
சிறந்த சுகாதாரப் பராமரிப்புத் தளமாகத் திகழ ஜோகூர் மாநிலம் இலக்கு
சிறந்த சுகாதாரப் பராமரிப்புத் தளமாகத் திகழ மலேசியாவின் ஜோகூர் மாநிலம் இலக்கு கொண்டுள்ளது.
யாரையும் குறி வைத்து அடிக்காதீர்கள்: ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' திரைப்படம், நவம்பர் 29ஆம் தேதி திரை காண உள்ளது.
சிரமங்கள் கடந்து சிறந்து விளங்கும் மாணவர் ஜோஹன்
கற்றலில் சிரமங்கள் இருந்தாலும் தனது அயராத உழைப்பாலும் பெறும் ஆசிரி யரின் உதவியோடும் நல்ல மதிப்பெண்களுடன் தொடக்கப்பள்ளி இறுதியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளார் மாணவர் ஜோஹன் சிங்.
ஹமாஸ்: பெண் பிணைக்கைதி கொல்லப்பட்டார்
இஸ்ரேலியப் பெண் பிணைக்கைதி ஒருவர் காஸா வின் வடக்குப் பகுதியில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு நவம்பர் 23ஆம் தேதியன்று தெரிவித்தது.
வளர்ந்துவரும் நாடுகள் அதிருப்தி
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 29வது பருவநிலை மாற்ற உச்சநிலை மாநாடு அஸர்பைஜான் தலைநகர் பாக்கூவில் நடைபெறுகிறது.
தேர்தல் கருத்துக்கணிப்பை பொய்யாக்கிய ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்
ஜார்க்கண்ட்டில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என்ற தேர்தல் கணிப்பைப் பொய் யாக்கியுள்ளது தேர்தல் முடிவுகள்.
உ.பி.பள்ளிவாசலில் ஆய்வுசெய்வதைக் கண்டித்து போராட்டத்தில் வன்முறை
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் ஷாஷி ஜமா பள்ளிவாசல் உள்ளது.
எதிர்த்தரப்புச் செல்வாக்கை நொறுக்கிய பாஜக கூட்டணி
ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்து மகாராஷ்டிர தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.
அவதூறு கருத்துகளை நீக்கும்படி ரகுமான் வழக்கறிஞர் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி வெளியிட்ட அவதூறான கருத்துகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி வழக்கு தொடுக்க நேரிடும் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாய்வுத் திட்டத்துக்கு 25 இளம் வல்லுநர்கள் தேர்வு: உதயநிதி வாழ்த்து
முதல்வரின் புத்தாய்வு திட்டத்தின்கீழ் பணியாற்ற 25 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வடசென்னைக்காக ரூ.1,300 கோடி மதிப்பிலான 80 திட்டங்கள்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,300 கோடி மதிப்பிலான 80 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி வைப்பார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.