CATEGORIES
فئات
அனைவரையும் கலங்க வைத்த டீச்சரம்மா!
அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயார் ராஜாமணியின் மறைவு கட்சி கடந்த சோகத்தை ஏற்படுத்திவிட்டது.
அதிரடி உறுப்பினர் சேர்க்கை! ஓட்டாக மாற்றுமா தி.மு.க.?
'எல்லோரும் நம்முடன்' என்ற முழக்கத்தை முன்வைத்து இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்துமாறு, மா.செ.க்கள் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட, நல்ல ரெஸ்பான்ஸ்.
அதிகாரிகள் தயவில் சிண்டிகேட்! குமுறும் வியாபாரிகள்! தவிக்கும் பொதுமக்கள்!
கோயம்பேடு அவலம்!
BIGG BOSS 4 ஆரம்பம்! சர்ச்சையும் ஆரம்..பம்..பம்..பம்!
கொரோனா கொண்டு வந்த பயத்தால் இந்தியாவில் நடக்க வேண்டிய ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச் துபாயில் ரசிகர்களே இல்லாத காலி மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதே போல் பார்வையாளர்கள் இல்லாத ஆடிட்டோரியத்தில் பிக்பாஸ் 4-வது சீசனை விஜய் டி.வி.யில் நடத்த களம் இறங்கிவிட்டார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மக்களின் வங்கியாக மாற்றிய மனிதர்!
வங்கிகள் என்பவை பணக்காரர்களுக்கும் வணிகர்களுக்குமான இடம் டம் என நினைத்து, எளிய மக்கள் ஒதுங்கி வந்த காலம் அது. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிகளில் பணப்பரிவர்த் தனைகடன் உள்ளிட்டவை சாதாரண மக்களுக்கு பெருங்கனவு. அப்போதுதான் ஒரு மனிதர், வங்கிகளின் கதவுகளை எளிய மக்களுக்குத் திறந்து கோபாலகிருஷ்ணன்.
ஜமீன் சொத்தைக் காப்பாற்ற ஊரை அழித்து மாற்றுப் பாதை!
ஆறுவழிச் சாலை மோசடிகள்!
சிறுமி கடத்தல்! காட்டுக்குள் விரட்டப்பட்ட குடும்பம்!
ஒரு கிராமத்தின் உண்மை நிலை!
காக்கிகளின் மசாஜ் வசூல்!
விளையாட்டு மைதானத்தில் கிடந்த அந்த உடலைப் பார்த்து, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மக்கள் அதிர்ந்தனர். மக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, விசாரணையில் ஈடுபட்ட போலீஸ், அது ஆண்டனி உபால்ட் என்பவரின் உடல் என்பதைத் தெரிந்துகொண்டனர்.
கடவுளுக்கு இணையாக காந்தி!
ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் அருகேயுள்ளது செந்தாம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்துவந்த வையாபுரி முதலியார் என்பவர், காந்தியடிகள் மீது தீராத பற்று கொண்டிருந்தார். காந்தியடிகளின் தீவிர பக்தராக இருந்த அவர், கடந்த 1997ஆம் ஆண்டு காந்திக்கும், அவரது துணைவியார் கஸ்தூரிபா அம்மையாருக்கும், ஒரு கோவிலை நிறுவினார்.
விடாக்கண்டர் எடப்பாடி! மல்லுக்கட்டும் சீனியர்கள்!
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடிக்கும் பன்னீருக்குமான மோதல்கள் அக்டோபர் 7-ல் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். இரு தரப்பிலும் சில சமாதான கொடிகள் ஏற்றப்பட்டிருந்த சூழலில், கொங்கு அமைச்சர்கள் சிலரின் யோசனையால் மீண்டும் முறுக்கிக்கொண்டார் எடப்பாடி. அதனால், பிரச்சனைக்குக்கு தீர்வு காண்பதில் திணறியபடியே இருந்தனர் இரு தரப்பிலும் பஞ்சாயத்துப் பண்ணும் சீனியர்கள்.
யோகி ஆட்சியில் சிதைக்கப்படும் பெண்கள்!
உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பூலாகார்கி கிராம வல்லுறவுச் சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் ஓயும்முன்னே, பல்ராம்பூரில் 19 வயதுப் பெண் ஒரு கும்பலால் வல்லுறவு செய்து கொள்ளப்பட்டி ருக்கிறாள். ஆஸம்கார்க் மாவட்டத்தில் 8 வயதுப் பெண் தனது உறவினர் ஒருவராலே சீரழிக்கப்பட்டிருக்கிறாள். உத்தரப்பிரதேச சம்பவங் கள் அதிர்ச்சி அலைகளைக் கிளப்புவதைத் தாண்டி, இதற்கொரு முடிவே ல்லையா என தேசத்தையே உளம் மரத்துப்போக வைத்திருக்கின்றன.
என்றென்றும் எங்கெங்கும் எஸ்.பி.பி.!
நினைவுலகில் உருகிய திரையுலகம்!
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வரிந்து கட்டும் சாதி அரசியல்! பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை!
வரிந்து கட்டுகிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவரது சொந்த ஆதரவாளர்களும் சமுதாயத்தினரும். எடப்பாடியும் தன் ஆதரவு பலத்தைப் பெருக்கியபடி ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த வாரம், துணை முதல்வர் ஓ.பி.எஸ். தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு விசிட் அடித்தவர், தனது மகன் எம்பி ரவீந்திரநாத் குமார் மற்றும் குடும்பத்தாருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டுக்குச் சென்றார்.
அ.தி.மு.க.வை அதிரவைத்த தி.மு.க கிராம சபை!
கொரோனாவைக் காரணம் காட்டி தமிழக அரசு கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்ததற்கு எதிராக, மக்கள் சபைக் கூட்டம் என்ற பெயரில் தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியைத் திக்குமுக்காட வைத்துள்ளன தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள்.
எடப்பாடி ரகசியத்தை ஒடைக்கட்டுமா?
சசிகலா முதல்வராவதை டெல்லி விரும்பவில்லை. ஓ.பி.எஸ்.சை வைத்து கேம் ஆட நினைத்தது. அதனை எடப்பாடியிடம்தான் முதலில் சொன்னார் ஓ.பி.எஸ்.
இவிய்ங்க சண்ட ஓயவே கூடாது! பா.ஜ.க. ப்ளான்!
தமிழகத்தை அ.தி.மு.க. ஆளும் போதெல்லாம் அதன் எதிர்காலத்தை இந்தியாவை ஆளும் தேசிய கட்சிகள்தான் தீர்மானிக்கின்றன. தி.மு.க., அ.தி.மு.க. பிரிந்த போது எம்.ஜி.ஆரை இந்திரா காந்தி ஆதரித்தார். அ.தி.மு.க. என்கிற கட்சி வலுப்பெற்றது. ஜானகி, ஜெயலலிதா சண்டையின் போது முதலில் ஒற்றுமையாக இருங்கள் என்று கூறிய ராஜீவ் காந்தி, பின்னர் ஜெயலலிதாவை ஆதரித்தார். ஜானகிஅரசியல் துறவறம் பூண்டார்.
ஆக்கிரமிக்கப்படும் அண்ணா பல்கலை!
கருப்பு பேட்ஜ் அணிந்துவந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள்
நீ பொய்யர்! நீ கோமாளி! ஜெயிக்கப் போவது யாரு?
பொறிபறந்த ட்ரம்ப்-பைடன் விவாதம்!
கனவுத் தொழிற்சாலையில் பசி-பட்டினி!
சினிமா செட் தொழிலாளர்களின் நிலை!
எஸ்.பி.பி.யின் கடைசிநேர போராட்டம்!
ஹலோ தலைவரே, 'பாடும் நிலா'ன்னு புகழப்பட்ட பாடகர் எஸ்.பி.பி.மறைவு எல்லாரையும் உலுக் கிடிச்சி."
போதை அரசியல்! நடிகைகளை குறி வைக்கும் பா.ஜ.க!
போதைப் பொருளுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வரும் வேட்டையில் தமிழ்த் திரைப்படங்களில் முகம் காட்டிய இரு நடிகைகள் சிக்கிக்கொண்டுள்ளனர் என பரபரப்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஒருவர் சோனாக்ஷி சின்ஹா.
எனக்கு 68 உனக்கு 28
தி.மு.க. பிரமுகரின் இரண்டாவது குடும்பம்!
அ.தி.மு.க. பிரமுகர் கொலை அலட்சியம் காட்டும் ஆளும்கட்சி!
இடைகழிநாடு பேரூராட்சி முன்னாள் அ.தி.மு.க. துணைத்தலைவர் அரசு என்கின்ற ராமச்சந்திரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் அ.தி.மு.க அரசே அலட்சியம் காட்டுவது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வருத்தமடைய வைத்துள்ளது.
தோழரின் தியாக வாழ்வு!
தலைமுறை அறிய வேண்டிய வரலாறு!
மோடி சட்டம்! விவசாயிகளை விழுங்கும் அம்பானி-அதானி!
துணைபோகும் எடப்பாடி!
தினகரன் டூ திவாகரன்! சசி குடும்பத்தின் அரசியல் கணக்கு!
சசிகலா விடுதலை விவகாரம் அவர் தரப்பைவிட அ.தி.மு.க. தரப்பில்தான் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. சீனியர்கள் பலரும் தங்களுக்குத் தெரிந்த மன்னர் குடித் தரப்புகளைத் தொடர்பு கொண்டு, நிலவரம் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீன் குத்தகை மோசடி! வறண்டுபோகும் அடவிநயினார் அணை விவசாயம்!
தற்போதைய தென்காசி மாவட்டத்தின் வடகரை நகரிலிருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவிலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கிறது 132 அடி உயரம்கொண்ட அடவிநயினார் அணை. இது 1989-ல் வடகரையை உள்ளடக்கிய கடையநல்லூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவன் வேண்டு கோள் விடுக்க கலைஞரின் முன்னெடுப்பால் கட்டிமுடிக்கப்பட்டது.
ஆண்டாள் கோவிலில் ஹோமம்! பறந்துவந்த பாசறை நிர்வாகி!
"யாகம்கிறாங்க... பூஜைங்கிறாங்க...எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதற்கு சிறப்பு வழிபாடுங்கிறாங்க... எங்கே? எதற்காக?" என்று கேட்டால், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபு, இன்னைக்கு குடும்பத்தோடு வந்தாருல்ல... அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து தனி என, ஹெலிகாப்டர்ல... எல்லாம் ஒரு வேண்டுதலுக் காகத்தான்...'' என்கிறார்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆளுங்கட்சியினர்.
"தி.மு.க.விடம் சீட்டுக்காக மல்லுக்கட்டாதீங்க!"
காங்கிரஸ் தலைவர்கள் திடீர் அட்வைஸ்
ரிலீஸ்! ரீ-என்ட்ரி! டெல்லியிடம் சசிகலா டீல்!
எப்பொழுதும் அ.தி.மு.க.வை எதிர்த்து விமர்சனம் செய்து கொண்டிருக்கும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சமீபத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒரு இடத்திலும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்கவேயில்லை. காரணம், சசிகலா ரிலீஸ் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் தான் என்கிறார்கள்.