ஆதரவளித்து வர நீட் நுழைந்த காலகட்டத்தில், அதாவது 2018-ல் 5 அரசுப் பள்ளி மாணவர்களும், 2019-ல் 6 அரசுப் பள்ளி மாணவர்களுமே மருத்துவம் படிக்க தேர்வாகியிருந்தனர். ஆனால், 7.5% உள் இடஒதுக்கீடு கிடைத்த பிறகு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவ, மாணவிகள் 2021-2022 கல்வியாண்டில் 555, 2022-2023 கல்வியாண்டில் 584, 2023-2024 கல்வியாண்டில் 625 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கல்வியாண்டில் 622 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 19 பேரின் மருத்துவக் கனவும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மொத்தம் 38 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவும் நனவாகியுள்ளது.
வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயராஜ், பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் படித்த உணவகத் தொழிலாளி மகள் ஆர்த்தி, தச்சுத் தொழிலாளி மகள் சுபஸ்ரீ, ஓட்டலில் வேலை செய்யும் தொழிலாளி மகன் சுதாகர், அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலை, கோழி இறைச்சிக்கடை தொழிலாளி மகன் வேந்தன், முடிதிருத்தும் தொழிலாளியின் மகளான ஜெயந்தி ஆகிய 5 மாணவ, மாணவிகளும் ஒரே நேரத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க தேர்வாகி யிருக்கின்றனர். இதனால் வயலோகம் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة September 07 - 10, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 07 - 10, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!
நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார்.
அண்டப்புளுகன் ஐக்கி...
\"அன்று அழைக்காத ஐ.நா.சபையில் கலந்துகொண்டதாக 'டொக்கு' வாங்கியது நித்தியானந்தா டீம். இன்றோ சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய இமேஜை சரிசெய்யும் விதமாக பணம் கொடுத்து அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாநாட்டில் வாண்ட்டடாக வண்டி ஏறி...
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.
தொடரும் தாதாயிசம்! மன்னார்குடி அவலம்!
மன்னார்குடியில் தேர்தல் பகையால் அ.தி.மு.க. நிர்வாகியை தி.மு.க. கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களோடு சென்று வெட்டிய விவகாரம் பரபரப்பாகிக் கிடக்கிறது.
ஆரம்ப காலத்தில் என்னை நாடிவந்த பதவிகள்! - டைரக்டர்-ரைட்டர் வி.சி. குகநாதன்
பல படங்களையும், சில நாடகங்களையும் எழுதுவதோடு தயாரிப்பிலும் ஓய்வற்று உழைத்துக்கொண்டு, ஏவி.எம். கதை இலாகா விலும் நான் பணியாற்றி வந்த காலத்திலே என் வண்டியை நானே ஓட்டிப்போவதே வழக்கம். கம்பெனி கார்களை என் டிரைவர்கள் ஓட்டுவார்கள். எனது கம்பெனியில் 60 திரைப்படப் பணியாளர்களுக்கு 69, 70, 71, 72-ஆம் ஆண்டுகளில் மாதச் சம்பளம் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தேன்.
மாணவிகளுக்கு மது! பாலியல் சீண்டல்! போக்சோவில் ஆசிரியர்!
\"சரக்கு அடிக்குறதில அவதான் எக்ஸ்பர்ட். அப்படியே சாப்பிடுவா அவ மட்டும் என்னவாம்?\" கிண்டலும் கேலியுமாக 9ஆம் வகுப்பு மாணவிகள் பேசிக்கொண்டது பள்ளி வளாகத்தைத் தாண்டி வெளியில் உலாவ, \"மாணவிகளுக்கு மதுவா?\" என உடன்குடி தாலுகாவே களேபரமானது. இதன் தொடர்ச்சியாகக் கட்டாய விடுப்பில் உடற்கல்வி அசிரியர் செல்ல, பெற்றோர்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளித் தாளாளரையும் கைது செய்துள்ளது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறை.
எடப்பாடியிடம் டீல் பேசும் பா.ஜ.க.!
ஹலோ தலைவரே, தேர்தலைக் குறிவைத்து தி.மு.க. அரசு விறுவிறுப்பாகத் திட்டங்களைத் தயாரித்து வருகிறதே?
டாக்டருக்கு கத்திக்குத்து! அரசுக்கு எதிராக மருத்துவர்கள்!
சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவுத்துறை தலைவர் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஊழல் ஆதாரங்களை திரட்டும் விஜய்?
இலவசத் திட்டங்களையும் அறிவிப்புகளையும் மட்டுமே அவர் தனது தேர்தல் நேர டெக்னிக் காகப் பயன்படுத்தவிருக்கிறார் என்கிறார்கள்.